மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பரிசோதனையின் முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அதற்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 10 மாதங்களுக்கு பின் தமிழகம் முழுவதும் 10,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடம்புக்கு சரி இல்லாத மாணவர்களை பெற்றோர்களிடம் ஒப்படையுங்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். நன்றாக எந்த வியாதியும் இல்லாத திடகாத்திரமான மாணவர்களுக்கெல்லாம் தேவையில்லாமல் கொரோனோ test எடுத்து பீதியை கிளப்புவதை விட்டு விடுங்கள். இப்போது தான் எங்கள் பிள்ளைகள் ஆவலுடன் பள்ளிக்கு போய் இருக்கிறார்கள். அதைக் கெடுத்து விட வேண்டாம். Test எடுத்தே தீருவோம் என்று பிடிவாதம் காட்டி எங்கள் பிள்ளைகள் படிப்பை சீர் குலைக்க முயற்சிக்க வேண்டாம். எங்கள் பிள்ளைகளுக்கு எதுவானாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் பிள்ளைகளை எங்களிடம் விட்டு விடுங்கள்
ReplyDelete