பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பேட்டி - kalviseithi

Jan 5, 2021

பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பேட்டி

 


பொங்கல் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன்  தெரிவித்துள்ளார்.

சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்காகத் தயார் செய்யப்பட்ட வகுப்பறைகளைப் பார்வையிட்டு, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.


அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு 10 மற்றும்12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது பற்றி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. இந்தக் கூட்டம் 8-ம் தேதி வரை நடைபெறும். நாளை முதல் அனைத்துப் பள்ளிகளிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க உள்ளது.

அதில் பெற்றோர்கள் முன்வைக்கும் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ப அரசு உரிய முடிவெடுக்கும்'' என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் ஜன.8-ம் தேதி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே இதுகுறித்த அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் ஏகமனதாக தெரிவிக்கும் கருத்துகளைத் தொகுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், நிர்வாகிகள், பெற்றோரிடம் கையொப்பம் பெற்று, அந்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அதைப் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.

இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில்தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

6 comments:

 1. Part time teachers ku oru vaipu kodunga plz

  ReplyDelete
  Replies
  1. Ye pongal function la therukuthu podava

   Delete
  2. No service Panna.naga tha idha seiya veandum

   Delete
 2. TET 2017
  January 5, 2021 at 5:50 PM
  B.Ed seniority வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதன் சீனியாரிட்டி படி ,TET தேர்ச்சி பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்

  ReplyDelete
 3. பள்ளிக்கூடம் திறந்துடாதீங்க...
  சம்பளம் கொடுத்துடுங்க...
  இல்லனா கொரோனா வரும்...😭😭😭

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி