பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2021

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி முடிவு.

 


தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5068 பேர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். கல்வித் துறையில் காலியாக உள்ள 50 ஆயிரம் அமைச்சுப் பணியாளர் இடங்களை நிரப்ப வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கவுன்சலிங்கில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது போல பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகளிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க  வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்து, கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ம் தேதி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை சந்தித்து மனு வழங்கும் போராட்டம் நடத்தப்படும். அதற்கு பிறகு பிப்ரவரி 12ம் தேதியும் அதற்கு பிறகு சென்னையில் முதல்வரை சந்தித்து மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும்.

6 comments:

  1. Thank you for support us sir part time techerskaga pesinadhuku

    ReplyDelete
    Replies
    1. Tq part time teachers namba yarunu katta idhu oru Nalla chance...

      Delete
    2. Hmm mela comments pota part time teacher nega yendha school nu konjam soiluga

      Delete
  2. Part time teacher compulsory exam aluthanum...k va part time teacher nanbarkaley..

    ReplyDelete
    Replies
    1. Sari nanbarey no problem yegaluku spl exam vaikalamey or conform panitu time kudukalamey

      Delete
  3. Nanbarey tet g.o 15.11.2011
    Yega posting g.o 11.11.2011 nanbarey

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி