பொங்கல் பண்டிகை - ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2021

பொங்கல் பண்டிகை - ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் செங்கோட்டையன்

 


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.


இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது குறித்து அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

6 comments:

  1. 2013 Tet நண்பர்களே இலவு காத்த கிளி கதை உங்களுக்குத் தெரியும் அதுபோல இன்னும் இவங்களை நம்பி ஏமாறாதீர்கள் இதோ வந்துவிடும் வேலை வந்து விடும் என்று நம்பி ஏமாந்தது போதும் ஏதாச்சு நல்ல வேலைக்கு படியுங்கள் டிஎன்பிஎஸ்சி நம்புங்கள் டிசம்பரில் போட்டுவிடுவார்கள் ஜனவரியில் போட்டுவிடுவார்கள் போட்டுவிடுவார்கள் கடைசியில் நாமத்தை போட்டுவிடுவார்கள் போடத்தான் போகிறார்கள் நாமத்தை. போதும் ஏழு வருடமாக இவர்களை நம்பி ஏமாந்தது.

    ReplyDelete
  2. டிஆர்பி வெளியிடும் வருடாந்திர அட்டவணையை தான் அவர் காலிபணியிட என்று சொல்லுகிறார்

    ReplyDelete
  3. Sareefillil saree eduthen vilaikuraintha saree anuppivitarkal kalviseithi vilambaram seithathal eduthen yaarum vangathirkal

    ReplyDelete
    Replies
    1. தமிழில் பதிவிடவும்...

      சேலை வாங்கி ஏமாந்து உள்ளீர் . கல்வி செய்தியின் விளம்பரம் பார்த்து.... சரியா

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி