தேர்தல் பணி பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2021

தேர்தல் பணி பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு.

தேர்தல் பணி : 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது .சட்டப்பேரவைத் தேர்தலில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பட்டி யலில் 50 வயதுக்கு மேற்பட்டோரை சேர்க்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத் தியுள்ளது . தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது . இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிர மாக மேற்கொண்டு வருகிறது . இதற்கிடையே வாக்குசாவடி கண்காணிப்பு உட்பட தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கள்தான் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர் . இதைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . இதையடுத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற் றும் அலுவலர்களின் பட்டியலை இறுதிசெய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதுதவிர ஏற்கனவே பட்டியல் சமர்ப்பித்த வர்கள் அதில் விடுபட்ட அல்லது சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை திருத்தம் செய்து அனுப்ப வேண்டும் . கரோனா தொற்று பரவ லால் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது . அதேபோன்று ஆசிரியர்களின் புகைப்ப டம் , வாக்காளர் அடையாள அட்டை எண் உள் ளிட்ட தகவல்களை கட்டாயம் குறிப்பிட வேண் டும் . மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய கார ணங்கள் இன்றி தேர்தல் பணியில் இருந்து ஆசிரி யர்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாது . அவ்வாறு விலக்கு பெறும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்க ளைச் சமர்ப்பிக்க வேண்டும் . அதை தலைமை யாசிரியர்கள் உறுதிசெய்து பட்டியலை இறுதி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்க ளில் துரிதமாக வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து விதமான பள் ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது . 



8 comments:

  1. Above 50 all people are dmk that is problam is't .

    ReplyDelete
  2. சம்பளம் மட்டும் வாயில் வைத்து தள்ளுங்கள்.. பொளந்து வாங்குவாளுங்க .

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் படித்துதான் வேலைக்கு வந்து இருக்கிறார்கள். அரசு வேலை கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தரம்கெட்ட விமர்சனத்தை செய்யாதீர்கள்.

      Delete
  3. Part time teacher ku election duty iruka

    ReplyDelete
    Replies
    1. Kandipa undu because idhuvum namba tha parka veandum

      Delete
  4. கண்ணுக்கு தெரியாத நண்பர்களே வணக்கம். எத்தனையோ வேலை பார்பவர்கள் பொது மக்கள் சென்றால் மதிப்பதே இல்லை. மற்றும் வேலை சீக்கிரம் முடியாது அவர்களும் நல்ல சம்பளம் மற்றும்..... ஆசிரியர்களாகிய நாங்கள் என்ன பாவம் செய்தோம். அரசு கொடுக்கும் வேலைகளை முடிந்தவரை ஒழுங்காக செய்கின்றோம். படித்து 12வருடம் கழித்துதான் வேலையே கிடைத்தது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி