DSE - பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மாணவர்கள் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ( இணைப்பு: மாவட்ட வாரியாக Field Engineers விபரப் பட்டியல். ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2021

DSE - பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மாணவர்கள் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ( இணைப்பு: மாவட்ட வாரியாக Field Engineers விபரப் பட்டியல். )

 

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் 6029 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது . உயர்நிலை பள்ளிகளுக்கு 10 கணினிகள் மற்றும் இதர உபகரணங்களும் , மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினிகள் மற்றும் இதர உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றின் அச்சத்தினால் அனைத்து பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு தற்போது நாளை 19.01.2021 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது . எனவே அனைத்து பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளதா என உறுதிபடுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் ஏதேனும் சிறு குறைபாடுகள் இருப்பின் உடனடியாக L & T நிறுனத்தால் சார்ந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள Field Engineers யிடம் தகவல் தெரிவித்து உடனடியாக சரி செய்து மாணவர்கள் பயன்பாட்டிற்காக தயாராக இருப்பதை உறுதி செய்திட சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


இணைப்பு: மாவட்ட வாரியாக Field Engineers விபரப் பட்டியல் :





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி