M.Ed 2021 - பட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் - உயர் கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2021

M.Ed 2021 - பட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் - உயர் கல்வித்துறை அறிவிப்பு.

அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் (M.Ed.) பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 07.01.2021 முதல் 13.01.2021 வரை www.tngasaedu.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் - உயர் கல்வித் துறை அமைச்சரின் செய்தி வெளியீடு.



அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை கல்வியியல் ( M.Ed. ) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக 07-01-2021 முதல் 13-01-2021 6J60 www.tngasaedu.in 6TGÖTM இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் . ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய பதிவுக் கட்டணம் ரூ .2 / - மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ .58 / - சேர்த்து ரூ .60 / - செலுத்தப்பட வேண்டும் . SC / ST விண்ணப்பதாரர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ .2 / - மட்டும் செலுத்தினால் போதுமானது . மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப் படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். மேலும் , மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும் . இது தொடர்பான கூடுதல் விபரங்கள் www.tngasaedu.in இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது . இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044-22351014 , 044-22351015 மற்றும் 044-28276791 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம். இது தொடர்பாக care@tngasaedu.org மற்றும் tndceoffice@gmail.com என்ற email முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களை கேட்டு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

3 comments:

  1. M.ed programme correspondence a illa ya

    ReplyDelete
  2. Med programme distance la irunthal தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  3. அமுதசுரபி பயிற்சி மையம், தர்மபுரி
    PG TRB தமிழ் & EDUCATION
    Classes is going on...(class started from yesterday onwards )
    தரமான materials for all units
    Contact :9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி