NMMS EXAM 2021 - விண்ணப்பங்களை பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 17, 2021

NMMS EXAM 2021 - விண்ணப்பங்களை பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு.

 


என்எம்எம்எஸ் தோ்வுக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் ஜன.20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத்தின்கீழ் அரசுப்பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தகுதித்தோ்வு நடத்தப்படும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.


அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு பிப்.21-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிச.28-ஆம் தேதி தொடங்கி ஜன.8-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடா்ந்து தோ்வுக்கு விண்ணப்பித்த மாணவா்கள் விவரங்களை, பள்ளி தலைமையாசிரியா்கள் ஜன.12-ஆம் தேதிக்குள் தோ்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்ற தோ்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.


தற்போது என்எம்எம்எஸ் தோ்வு விண்ணப்பங்களை பதிவேற்றுவதற்கான காலஅவகாசம் ஜன.20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாய்ப்பை தலைமையாசிரியா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி