வனக்காப்பாளர் தேர்வில் 230 பேர் நிராகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2021

வனக்காப்பாளர் தேர்வில் 230 பேர் நிராகரிப்பு.

 

வனக் காப்பாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்ற, 230 பேர் நிராகரிக்கப்பட்டு உள்ளனர்.


தமிழகத்தில் காலியாக உள்ள, வனக் காப்பாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வு, 2020 மார்ச்சில் நடந்தது. ஊரடங்கு காரணமாக, இதன் தொடர் நடவடிக்கைகள் முடங்கின.இதன்பின், இந்தாண்டு ஜன., 5 முதல் இதற்கான சான்றிதழ் சரி பார்த்தல், உடல் திறன் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், உயர் மதிப்பெண்களுடன் தகுதி பெற்றவர்களின் உத்தேச பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது.


தற்போது, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறித்த விபரங்களை, வனத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, சான்றிதழ்கள் சரியாக இல்லாததால், 107 பேர்; உடல் தகுதி சரியில்லாததால், 123 பேர் என, மொத்தம், 230 பேர் நிராகரிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களின் பதிவு எண்கள், வனத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி