பணி நியமன ஆணை வழங்கக்கோரி எடப்பாடி வீட்டை ஆசிரியர்கள் முற்றுகை - kalviseithi

Feb 3, 2021

பணி நியமன ஆணை வழங்கக்கோரி எடப்பாடி வீட்டை ஆசிரியர்கள் முற்றுகை

 


சான்று சரிபார்ப்பு முடிந்த பிறகும் பணி நியமன ஆணைகள் வழங்காததால், முதல்வர் எடப்பாடி வீட்டின் முன் நேற்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.  தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2018-19ம் ஆண்டில் ஏற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு சான்று சரிபார்ப்பு இறுதியாக கடந்த மாதம் 5ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கு பிறகு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கான தெரிவுப் பட்டியலையும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தயாரித்துள்ளது. ஆனால் பணி நியமன ஆணைகளை இதுவரை வழங்கவில்லை.


இதை கண்டித்தும், பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கக்கோரியும் 100க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடு உள்ள பசுமைச்சாலையில் ஒன்று திரண்டனர். அப்போது, கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி முதல்வர் வீட்டை முற்றுகையிடவும் முயன்றனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

9 comments:

 1. கலை அறிவியல் கல்லூரிக்கு CV நடக்கவே இல்லையே இன்னும்..ஜெயமாலினி நடனம் ஆடியது சரி எங்கு எப்படி ஆடினார்...கல்வி செய்தியில் வரூம் செய்திகள் அனைத்தும் தெனாலி ராமன் கதைதான்

  ReplyDelete
 2. Kalvi seithi vara vara kevalama news podranga

  ReplyDelete
 3. டேய் குழப்ப வாதிகளா உதவி பேராசிரியர் பணிக்கும், முதுகலை ஆசிரியர் பணிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

  ReplyDelete
 4. News ennane theriyama istathuku olari vidranunga kalviseithi.

  ReplyDelete
 5. Oru photo kedacha adha vera news la link panni poduradhu. Unga vilambarathuku aduthavanga vazhkaila yen vilaiyaduringa.

  ReplyDelete
 6. Please collect curre news not college lecture
  lecture only pg teacher 1:2 ratio cv canfitate

  ReplyDelete
 7. Second list ketrukanga avlo than nothing new
  Intha government la ethu ketalum kedaikathu thantha vangikanum avlo than

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி