ரூ.2.5 லட்சம் தொகைக்கு மேலான பிஎப் முதலீட்டிலிருந்து வட்டி வரி விதிப்புக்கு உட்பட்ட தொகையை தனியாக பராமரிக்க முடிவு. - kalviseithi

Feb 17, 2021

ரூ.2.5 லட்சம் தொகைக்கு மேலான பிஎப் முதலீட்டிலிருந்து வட்டி வரி விதிப்புக்கு உட்பட்ட தொகையை தனியாக பராமரிக்க முடிவு.

 


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) தொகையில் ரூ.2.5 லட்சம் தொகைக்கு மேலான முதலீடுகளுக்கு கிடைக்கும் வட்டி வருவாயைக் கணக்கிட புதிய வழிமுறைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இதன்படி தொழிலாளர்களின் முதலீட்டு தொகையில் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிமான தொகையை தனியாக பராமரித்து அதற்குக் கிடைக்கும் வட்டி வருமானத்தை கணக்கிடுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.இதன்படி வரி விதிப்புக்கு உட்படாத தொகையை தனியாகவும், வரி விதிப்புக்கு உள்ளாகும்தொகையை தனியாகவும் பராமரிக்கலாம் என பரிசீலிக்கப் படுகிறது. வரும் நிதி ஆண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்தொழிலாளர்கள் வருங்காலவைப்பு நிதியில் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் தங்களது பங்களிப்பை செலுத்தியிருந்தால் அந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டி வரி விதிப்புக்கு உட்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இவ்விதம் தனித்தனியாக பிரித்து கணக்கிடுவது என்பது மிகவும் கடினமான பணி என்று தணிக்கைத் துறையினர் மட்டுமின்றி வரித்துறை அதிகாரிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இரண்டு விதமான கணக்குகள்

இரண்டு விதமான கணக்குகளை பராமரிக்க நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.இதன்படி ரூ.2.5 லட்சத்துக்கும் மேலான தொகையை முதலீடு செய் வோரின் கணக்கு தனியாக பராமரிக்கப்படும். இதன்படி கூடுதலாக முதலீடு செய்து அந்த முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருவாய்வருமான வரி விதிப்புக்குட்படுத்து வதாகும். ஆனால் இவ்விதம் செயல்படுத்துவது கணக்கீட்டு முறையை மேலும் சிக்கலாக்கும் என்றே தோன்றுகிறது.

மேலும் இவ்விதம் கூடுதலாக பெறப்படும் வட்டி வருமானத்தை வரி விதிப்புக்குட்படுத்துவது தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டுமா அல்லது பணியாளர் ஓய்வூதியம் பெறும்போது வட்டியை கணக்கிட வேண்டுமா என்ற சிக்கலும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி