3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - kalviseithi

Feb 26, 2021

3:நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வி –ஆசிரியர்கள் பணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்ள 3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!பார்வையில் காணும் கடிதத்தில் , சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை , பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences ( NIMHANS ) - ன் psychiatric social work துறையுடன் இணைந்து drug demand reduction program என்ற தலைப்பில் ஆளுமை திறனை வளர்பபதற்கான 3 நாட்கள் பயற்சியினை மேற்படி நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் உத்தேசமாக பிப்ரவரி இறுதி வாரத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200 ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரை செய்யக் கோரப்பட்டுள்ளது . இப்பயிற்சியானது 40 நபர்கள் கொண்டு நடத்தப்படவுள்ளது . பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ள ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக ரூ .1500 / - பயணக் கட்டணமாக வழங்கப்படும் எனவும் , பயிற்சியின் போது தங்குமிடமும் மற்றும் உணவும் மேற்படி நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது. அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து இணைப்பில் குறிப்பிட்ட படிவத்தில் விவரங்களை பூர்த்தி ( as soft copy in excel file ) செய்து 27.02.2021 க்குள் இவ்வலுவலக வி 2 பிரிவு மின்னஞ்சல் v2sec.tndse@nic.in என்ற முகவரிக்கு அனுப்புமாறும் , முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட தொகுப்பறிக்கையினை விரைவு அஞ்சல் மூலம் அனுப்புமாறும் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
1 comment:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி