வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அர சாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு. - kalviseithi

Feb 26, 2021

வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அர சாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு.

 


ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அர சாணையை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக பள்ளி கல்வித் துறை செயலர் , ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . 

விருதுநகர் மாவட்டம் , அருப்புக் கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சுமதி , உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு : தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற் கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது . கடந்த ஆண்டு வரை ஆசிரியர் பணிக்கு 58 வயது வரை விண்ணப்பிக்க முடியும் . ஆனால் 

தற்போதைய அறிவிப்பில் 2021 ஜூலையில் 40 வயதை கடந்தவர் கள் விண்ணப்பிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது . இதனால் 40 வயதை கடந்தோர் பாதிக்கப் பட்டுள்ளனர் . 

எனவே , தொடக்க , உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது . 

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி , நீதிபதி ஹேமலதா அமர்வு விசாரித்தது . மனு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை செயலர் , ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு , அடுத்த விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர் .

17 comments:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete
  Replies
  1. Maangetta coaching center pola... Entha news la add podanum nu oru arivu illa... Famous coaching centers ye entha add um podala... Dubakar institute thaanee nee... Madurai Target la poi oru class attain panni paaru.... Aparam therium un institute in stage....

   Delete
 2. அரசானைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாண்டு தளர்வு உண்டு அதையும் தேர்வு வாரியம் பின்பற்றவில்லை.அரசானை வேண்டுவோர் 8098391674தொடர்புகொள்ளவும்.

  ReplyDelete
 3. நல்ல தீர்ப்பு வரவேண்டும்.
  வெந்து நூலாகிகிடக்கின்றோம்

  ReplyDelete
 4. நீங்கள் மன சாட்சி உள்ளவர்கள் தானா? வாழ்க்கையே போக போது என்று வேதனையுடன் இருக்கும் விளம்பரம் செய்கிறது நல்ல இருக்க. உங்களுக்கும் இந்த நிலைக்கு தள்ளியவர்க்கும் என் வித்தியாசம். மற்றவர்கள் மரணத்தைக் கூட காக்க பார்க்கிறிங்க. தயவுசெய்து வேண்டாமே. தரத்திர்க்கு விளம்பரம் தேவை இல்லை.

  ReplyDelete
 5. Best wishes above 40 and 45 age teacher. Don't worry. You will get best judgement so all the best

  ReplyDelete
 6. நீங்கள் மன சாட்சி உள்ளவர்கள் தானா? வாழ்க்கையே போக போது என்று வேதனையுடன் இருக்கும் போது இந்த விளம்பரம் செய்கிறது நல்ல இருக்க. உங்களுக்கும் இந்த நிலைக்கு தள்ளியவர்க்கும் என் வித்தியாசம். மற்றவர்கள் மரணத்தைக் கூட காசாக்க பார்க்கிறிங்க. தயவுசெய்து வேண்டாமே. தரத்திர்க்கு விளம்பரம் தேவை இல்லை.

  ReplyDelete
 7. pls avoid ad atleast in age related news.

  ReplyDelete
 8. Best wishes above 40 and 45 age teacher. Don't worry. You will get best judgement so all the best

  ReplyDelete
 9. 6 வாரத்துக்குள் அப்ளிகேஷன் போட்டு முடிந்து விட்டிருப்பார்கள், இவர்களுடைய ஆட்சியும் முடிவடைந்து விட்டிருக்கும் அப்போது யாரை போய் கேட்பது

  ReplyDelete
  Replies
  1. Right sir .court lam govt solratha than kekum so cancel aga vaipillai

   Delete
  2. ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி நம்மிடம் ௨ள்ளது இந்த ௮ரசை தூக்கி ௭ரியுங்கள்

   Delete
 10. அமுதசுரபி பயிற்சி மையம்
  தர்மபுரி & கிருஷ்ணகிரி
  PG TRB தமிழ் & கல்வியியல்
  Best coaching centre in Dharmapuri
  சாதனை :
  கடந்த PG TRB தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம்...
  வகுப்பு நடைபெறும் இடம் :
  RK Complex
  Near 4 Road,Dharmapuri.

  கிருஷ்ணகிரி
  Near Govt. Arts. College for men,kuppam Road.
  Chennai bye pass
  Contact : 9344035171
  (குறிப்பு : கல்வியியல் பகுதிக்கு Mphil in Education,NET In Education - ல் தகுதி வாய்ந்த சிறந்த விரிவுரையாளர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன...)

  ReplyDelete
 11. அமுதசுரபி பயிற்சி மையம்
  தர்மபுரி & கிருஷ்ணகிரி
  PG TRB தமிழ் & கல்வியியல்
  Best coaching centre in Dharmapuri
  சாதனை :
  கடந்த PG TRB தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம்...
  வகுப்பு நடைபெறும் இடம் :
  RK Complex
  Near 4 Road,Dharmapuri.

  கிருஷ்ணகிரி
  Near Govt. Arts. College for men,kuppam Road.
  Chennai bye pass
  Contact : 9344035171
  (குறிப்பு : கல்வியியல் பகுதிக்கு Mphil in Education,NET In Education - ல் தகுதி வாய்ந்த சிறந்த விரிவுரையாளர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன...)

  ReplyDelete
 12. Sumathimam please give me your contact number, can I join with you

  ReplyDelete
 13. Sumathi mam i can joining with you .pls give your contact number

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி