தற்போதைய சூழலில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2021

தற்போதைய சூழலில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

 


தற்போதைய சூழலில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சூழலில், கடந்த மாதம் 19ம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பெற்றோரின் அனுமதிக் கடிதத்துடன் பள்ளிக்கு வர அரசு அனுமதி அளித்ததன் பேரில், கடந்த 8ம் தேதியில் இருந்து 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.


கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்திருப்பதால் பிற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.


தேர்தலுக்கு முன்பாக முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இன்றைய சூழ்நிலையில் 6,7,8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும், 6,7,8ம் வகுப்புகளுக்கு டேப் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

7 comments:

  1. ரொம்ப தெரியும் உனக்கு, போய் கல்வித்துறையை கேலியா உனக்கு தெரியாம பள்ளிக்கூடம் திறக்க போறாங்க

    ReplyDelete
  2. தற்போதைய சூழலில் ஆசிரியர் பணிநியமனமும் இல்லை அப்படிதானே ?????

    ReplyDelete
  3. தற்போதைய சூழலில் அதிமுக விற்கு ஓட்டும் இல்லை

    ReplyDelete
  4. உன்ன செ......ல அடிப்பேன்டா புண்....

    ReplyDelete
  5. இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ மேற்கண்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

    அமைச்சர் சொல்வதை நம்ப வேண்டாம்.

    ReplyDelete
  6. Ivanlam oru aalu poda en poooo.......................

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி