வெற்றி நடை போடும் தமிழகம் - தமிழக அரசின் 8 ஆண்டு கடனுக்கான வட்டி ரூ.1,89,872 கோடி! - kalviseithi

Feb 12, 2021

வெற்றி நடை போடும் தமிழகம் - தமிழக அரசின் 8 ஆண்டு கடனுக்கான வட்டி ரூ.1,89,872 கோடி!

 


மதுரை: தமிழக அரசு கடைசி 8 ஆண்டில் வாங்கிய பல்வேறு வகை கடன்களுக்கான வட்டி தொகை மட்டும் ரூ.1,89,872.18 கோடி. இதில் ரூ.1,65,814.52 கோடியை மாநில அரசு செலுத்தி இருக்கிறது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வரவு, செலவு விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மத்திய தலைமை நிதி தணிக்கைக்குழு வெளியிட்டுள்ளது. 

இதில் மாநிலங்கள் வாங்கிய அனைத்து வகை கடன்களுக்கான வட்டி விகிதமும் இடம்பெற்றுள்ளது. 

அதில் கடைசி 8 ஆண்டில் தமிழகம் வாங்கிய பல்வேறு வகைகடன்களுக்கான வட்டி தொகை மட்டும் ரூ.1,89,872.18 கோடி என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுவரை ரூ.1,65,814.52 கோடியை மாநில அரசு செலுத்தியுள்ளது. 

நிலுவைத் தொகையை மார்ச் மாதத்திற்குள் கொடுத்தாக வேண்டும். 

எட்டு ஆண்டில் தமிழக அரசு பெற்ற கடன்களுக்கான வட்டி விவரம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இது குறித்து மதுரை மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம் கூறுகையில், 

'கடைசி 8 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட வட்டி மட்டுமே ரூ.1.65 லட்சம் கோடி என்றால், கடன் எவ்வளவாக இருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை. 

அரசு செலுத்திய வட்டி தொகையை மட்டும் பயன்படுத்தினால், பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.73,972 வீதம் வழங்கிட முடியும்.

இந்த நிதியாண்டுக்கான வட்டியும் சரியாக செலுத்தப்படவில்லை. 

இன்னும் இரு மாதங்களே இருக்கும் நிலையில் ரூ.20,146.77 கோடி செலுத்தப்பட வேண்டும். 

கடன் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். 

அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்' என்றார்.


4 comments:

  1. இது அரசியலை சார்ந்தது. கல்விக்கும் இதுக்கும் என்ன தொடர்பு.


    கல்வி சம்பந்தமான மட்டும் பதிவு செய்யலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி