வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரி நிறுவனங்கள் திறப்பதற்கான அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2021

வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரி நிறுவனங்கள் திறப்பதற்கான அரசாணை வெளியீடு.

 * வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் இயங்கும் !

* வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரி நிறுவனங்கள் திறப்பதற்கான அரசாணை வெளியீடு. 

கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் டிப்ளமோ கல்லூரிகளில் படிக்கும் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் பிப்ரவரி 8-ம் தேதி முதல், வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டன. மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதேபோல இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தேர்வுகளும் நடத்தப்பட்டன.


எனினும் முதலாமாண்டுக்கான 2-வது செமஸ்டர், இரண்டாமாண்டு மாணவர்களுக்கான 4-வது செமஸ்டர் மற்றும் முதுகலை மாணவர்களுக்கான 2-வது செமஸ்டர் தேர்வுகளும், அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.


தொற்றுப் பரவல் குறைந்தபிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் 7-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில், கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் டிப்ளமோ கல்லூரிகளில் படிக்கும் அனைத்து ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பாடத்திட்டத்தை உரிய காலத்தில் முடித்துத் தேர்வுகளை நடத்த, வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா  முன்னெச்சரிக்கை குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசாணையை உயர் கல்வித்துறைச் செயலர் அபூர்வா வெளியிட்டுள்ளார்.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி