அரசுக் கல்லூரிகளில் தற்காலிக பணியிடங்கள்: நீட்டிப்பு வழங்க முடிவு. - kalviseithi

Feb 5, 2021

அரசுக் கல்லூரிகளில் தற்காலிக பணியிடங்கள்: நீட்டிப்பு வழங்க முடிவு.

 

அரசுக் கல்லூரிகளில் தற்காலிக பணியிடங்களுக் கான கால வரையறையை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கல்லூரி கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றன. இவற்றில் கூடுதலாக உருவாக்கப்பட்ட தற்காலிக பணியிடங்களில் 4775 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


 இவர்களுக்கான பணிக்காலம் மார்ச் மாதத்துடன் முடியவடைகிறது.  இதையடுத்து தற்காலிகபணியிடங்களுக்கான கால வரையறையை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கல்லூரி கல்வி இயக்குநரகம் முடிவுசெய்துள் ளது. இதற்கான கருத்துரு உயர்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு உள் ளதாகவும், ஒப்புதல் கிடைத்தபின் அறிவிப்பு வெளியிடப்படும் என வும் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி