மற்ற வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2021

மற்ற வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்.

 


பிப்ரவரியில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு, தேர்வு அட்டவணை வெளியிடப்படும்போது வழங்கப்படும். நீட், ஜே.இ.இ. பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து, மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. இருப்பினும் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் ஹைடெக் லேப் உள்ளது. மாணவர்களுக்கு க்யூ ஆர் கோடு, யூ-டியூப் சேனல் மற்றும் 12 தொலைக்காட்சி வழியாக பாடம் கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் 9, 10, 11, 12ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு பிப்ரவரி மாதம் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் 6ம் வகுப்பு திறக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் கவனித்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

10 comments:

  1. அட்டவணை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் அப்புறம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட காரணத்தால் வெளியிடுவோம்

    ReplyDelete
  2. எங்க ஊர்ல இந்த நியூஸை கேட்டு கேட்டு ஒருவர் முழுவதுமாகவே பைத்தியமாக மாறி விட்டார்

    ReplyDelete
  3. Ivane oru kena paya ivanuku onnum theriyathu
    Ivanuku therinjathu ellame viraivil viraivil mattume

    ReplyDelete
  4. சசிகலா அம்மா வர போறாங்க. இவனுங்களுக்கு ஆப்பு அடிக்க போறாங்க

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர் mix பண்ணி அடிப்பாங்களா ராவா தானா

      Delete
    2. தண்ணீர் mix பண்ணி அடிப்பாங்களா ராவா தானா

      Delete
  5. அப்ப நியமனம் பட்டியல் இல்லையா

    ReplyDelete
  6. விரைவில் விரைவில் விரைவில்

    ReplyDelete
  7. கல்வியில் விளையாடதிங்டா அது மோசமான பின் விளைவுகளுக்கு வழி வகுக்கும்?!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி