கதறும் கணினி ஆசிரியர்கள், கண்டுகொள்ளாத தமிழக அரசு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2021

கதறும் கணினி ஆசிரியர்கள், கண்டுகொள்ளாத தமிழக அரசு!

 



தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கடந்த ஆண்டு பல ஆண்டுகளாக கணினி பாடத்திட்டத்தை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது.

குறிப்பாக, தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கணினி கல்வி கிடைக்கிறது, அரசு பள்ளியில் கணினி கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது என்பதே அவர்களின் பிராதானமான கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மவுனமாகவே உள்ளது.


தற்போது, அவர்கள் அரசுப்பள்ளி மேன்மை பெற 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் ஐந்து கோரிக்கையை முன்வைத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றனர்.

அதன் கோரிக்கை விவரம்:

அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை
அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் கோரிக்கையை தேர்தல் அறிக்கைக்கு..

அ).அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.

(தமிழக அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய பாடதிட்டத்தில் அறிவியல் பாடத்தில் வெறும் மூன்று பக்கங்களை மட்டும் பெயருக்காக இணைத்துள்ளது.கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக வழங்கிட வேண்டுகிறோம் )


ஆ).சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும்”

*சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல் 10ம் வகுப்பு வரை)கொண்டுவரப்பட்ட கணினி பாட புத்தகம் பல கோடி செலவில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு பயன்படாத வண்ணம் இன்று வரை முடக்கப்பட்டுள்ளதை நடைமுறை படுத்த வேண்டும்.


இ).கணினியும்,ஆய்வகமும் அனைத்து தமிழக அரசுப்பள்ளிகளிலும்:”

*அனைத்து பள்ளிகளிலும் 50கணினிகளுடன் கணினி ஆய்வகங்களை உருவாக்கிட வேண்டும்.(இலவச மடிக்கணினி கொடுப்பதை காட்டிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் கல்வியாக வழங்கிட வேண்டுகிறோம்)

ஈ).அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்”.

*கணினி பாடத்திற்கு மூன்று புத்தகங்கள் வழங்கிய அரசு 2011லிருந்து இன்று வரை தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு உருவாக்கித்தரவேண்டும்.

உ). பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்”.

*கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்) பள்ளிகளுக்கு(11-12 குறைந்தது பட்சம் ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.

(NCERT விதியின் படி முதல் வகுப்பிலிருந்து கணினி பாத்தை தனிப்பாடமாக மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும்.)

“கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்”.

திரு வெ.குமரேசன்,
9626545446 ,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

7 comments:

  1. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties
    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES
    Hostel Available

    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  2. ஆம் வரவேற்கிறேன்.

    ReplyDelete
  3. அப்போ ஒன்றாம் வகுப்பு முதல் இந்தி பாடமும் வைக்க வேண்டும், வணிகவியல் வைக்க வேண்டும், பொருளாதாரம் வைக்க வேண்டும், அரசியல் அறிவியல் வைக்க வேண்டும், உளவியல் வைக்க வேண்டும், நர்சிங் வைக்க வேண்டும்,



    இன்னும் வெச்சுட்டு போகலாம்....

    தனியார் பள்ளி கல்வி கட்டணம் வசூலிக்க ஸ்கேட்டிங் வைக்கிறான், நடன வகுப்பு வைக்கிறான், பாட்டு வகுப்பு வைக்கிறான், கராத்தே வைக்கிறான், நீச்சல் பயிற்சி வைக்கிறான், ஒலிம்பியாட் பயிற்சி வைக்கிறான், நீட் பயிற்சி தன்னுடைய பள்ளியில் பெரு நிறுவன பங்களிப்புடன் வைக்கிறான், தனி தனி ஆசிரியர் கொண்டு, வாரம் வாரம் தேர்வு வைக்கிறான்,


    இதெல்லாம் கண்ணுக்கு தெரியுதா.... சும்மா பிஎஸ்சி cs படிச்சதக்கு உங்களுக்கு புதுசா பாடமே தொடங்க முடியுமா... அதான் மேல்நிலை வகுப்புல இருக்கே... வேற என்ன வேண்டும்...

    தனியார் பள்ளியில் கணினி வகுப்பு வாரம் இருமுறை தான், அந்த பாடம் ஒரு கண்துடைப்பு தவிர முழுநேர பாடம் இல்லை .

    வேறு பொழைப்பு இருந்தால் பார்க்கவும்...

    ReplyDelete
    Replies
    1. Dai K.P nee stop pannu yarumay nalla irruka kuadadhu

      Delete
    2. ada m.p... education system na ennanu poi paaru.. primary, secondary, higher secondary na ennanu... cs course endha category nu paru, d.ted na ennanu paru, b.ed na ennanu paru,

      Delete
  4. ஏற்கனவே இருந்த தொழிற்கல்வி பாடங்களை நீக்கி கணினி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டது. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஏற்கனவே இருந்த Craft instructor( Weaving), Craft instructor (Book Binding), Craft instructor (Agriculture), Typewriting, Library ஆசிரியர் பணியிடம் இல்லாமல் Handloom weaving lower/Higher, Book Binding Lower /Higher, Agriculture Lower /Higher, Library, Typewriting படித்தவர்கள் வேலையில்லாமல் தெருத்தெருவாக அலைகிறார்கள், மேலும் இந்த கணனி ஆசிரியர்களால் 11, 12 Standard Textile technology, agriculture group.... etc தொழிற்கல்வி பிரிவு நீக்கப்பட்டடு துயரம் அடைந்து வருகின்றனர்

    ReplyDelete
  5. We are all requesting kindly TN govt turn to the computer science teachers job.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி