கல்வியறிவு தேவை இல்லை, ஓய்வூதியம் உண்டு _ தமிழக அரசு வேலை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2021

கல்வியறிவு தேவை இல்லை, ஓய்வூதியம் உண்டு _ தமிழக அரசு வேலை!

 


தமிழகத்தில் அரசு வேலை


தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு


#காலிபணியிடங்கள் :  234


#பதவி :சட்ட மன்ற உறுப்பினர்

                    ( 5வருடம் )


#சம்பளம் : ₹.1,05,000

( முக்கியமாக வாழ்நாள் முழுவதும் பென்சன் ₹.25,000

,குடும்ப ஓய்வூதியம் ₹.12,500

ஆண்டுக்கு மருத்துவபடி ₹.50,000, 

பதவியில் இருக்கும்போது இறக்கும் எம்எல்ஏ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் )


#கல்வி_தகுதி : தேவையில்லை

( ஆண்கள், பெண்கள் இருபாலரும் )


#வயது : 25வயதுக்கு மேல்


குளிர்சாதன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பயணம் செய்ய சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், சட்டப்பேரவை தற்போதைய உறுப்பினர்கள் இலவசமாக பயணம் செய்யலாம். மேலும், அவர்களது வாழ்க்கைத் துணை அல்லது உதவியாளர்கள் குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட பேருந்துகளில் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


#கட்டண_விபரம் :

சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாய் தேர்தல் டெபாசிட் செய்ய வேண்டும். இதுவே எஸ்சி, எஸ்டி என்றால் இந்தக் கட்டணத்தில் 50 சதவீதம் டெபாசிட் செய்தால் போதும்.


தேர்வு செய்யப்படும் முறை :

எந்த தொகுதி தேர்வு செய்கிறோமோ அந்த தொகுதி மக்கள் மூலம் தேர்வுசெய்யப்படும்.


#பணிகள் :

ஒவ்வொரு வருடமும் ₹ 2.5 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தொகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 


தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக சரிசெய்துகொடுக்க வேண்டும்.


சட்டச்சபையில் தொகுதியின் வளர்ச்சி திட்டத்தை எடுத்துகூறி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

12 comments:

  1. படித்து பல போட்டித் தேர்விற்கு தயார் ஆவதற்கு பதிலாக அரசியலில் நுழைந்தால் நம் வருங்கால சந்ததியே மிக சிறப்பாக வாழலாம்.

    ReplyDelete
    Replies
    1. Geetha k Neenga Tet paper 1 / 2 edhula pass ma

      Delete
    2. Nathiya send your contact number

      Delete
    3. What is ur name unknown? R u TET passed candidates?

      Delete
    4. புத்தி கூர்மையால் வேறு வேலை செய்து பிழைக்கலாம் தோழர்களே.அரசு வேலையில் இருப்பவர்கள் காரில் சென்றால் நாம் சைக்கிளில் செல்லலாம் அது இந்த நாட்டிற்கு நல்லது.நம் குழந்தைகளின் தலைமுறை மாறி ஏன் வக்கீலாகவோ டாக்டராகவோ மாறி நம் காயம் ஆற்றும்

      Delete
  2. Replies
    1. Bala Sir Neengal endha year la Tet paper 1 / 2 pass.

      Delete
  3. மன வெறுப்பின் கண்ணியமான வெளிப்பாடு இந்த பதிவு. 12 ம் வகுப்பில் 1112 மதிப்பெண் எடுத்த என்னால் TETல் 92க்கு மேல் எடுக்க முடியவில்லை. பெற்றோர் மனைவி பிள்ளைகளை காப்பாற்ற 12000 ரூ சம்பளத்திற்கு சேல்ஸ்மேன் வேலைக்கு செல்கிறேன். முதலிலேயே சொல்லி இருந்தால் 12ம் வகுப்போடு நிறுத்தியிருப்பேன். எல்லாம் என் விதி என்று ஒவ்வொரு நாளையும் கடத்துகிறேன்.

    ReplyDelete
  4. Tnpsc முயற்சி செய்து பாருங்கள்

    ReplyDelete
  5. ஆனால் இவர்களை தேர்வு செய்வது அரசாங்கம் இல்லை இவர்களை அப்பாயின்மென்ட் பண்ணுவது மக்களாகிய நாம்தான் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்பொழுது அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று பார்க்காமல் ஜாதி மதம் பணம் இவற்றை அடிப்படையாக வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் மனநிலை இருக்கும் பொழுது இப்படித்தான் நடக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி