இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு! - kalviseithi

Feb 10, 2021

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு!

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த 159 ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!01.01.2021 நிலவரப்படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் இடைநிலை / சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் ) பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் முன்னுரிமை பெயர்ப்பட்டியல் ( Seniority List ) தயாரித்து இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படுகிறது.


 இப்பட்டியலினைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அனுப்பி அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என சரிபார்த்து அவ்வாசிரியரின் ஒப்பம் பெறப்பட்டு கோப்பில் வைத்திருத்தல் வேண்டும் . இப்பட்டியலில் சேர்க்கை / நீக்கம் / திருத்தம் ஏதுமிருப்பின் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடமிருந்து பெற்று இக்கடிதம் கிடைக்கப் பெற்ற ஒரு வாரத்திற்குள் இவ்வியக்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். மேலும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் இடம் மாறியிருப்பின் அவ்விவரத்தினையும் உடன் தெரிவிக்க வேண்டும் . சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான தகுதி குறித்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே 01.01.2021 க்கான பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் ) பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.


SGT TO MATHS BT Promotion Panel List 2021 - Download here

7 comments:

 1. எல்லா பட்டியலும் வெளியாகிறது TETபட்டியல் மட்டும் வெளியாகாது போலிருக்கு
  13ம் தேதிக்குள்ள பட்டியல் வரும்னு சொல்லிட்டு பெரிய குண்டை தூக்கி போட்டுட்டு போயிட்டார் அமைச்சர்

  ReplyDelete
 2. TNTET PAPER 1,2 VAIPPU IRUKKU POLA

  ReplyDelete
  Replies
  1. எப்படி சொல்றீங்க சார்...

   Delete
  2. Promotion kodukkangala so antha place vacancy aahumila

   Delete
 3. School theranthathan posting poda mudiumnu solrar aana natkkal yarukkum katthirukkathunu theriyatha? Election date announce pannitta posting eppadi poda mudium...

  ReplyDelete
 4. Tet passed candidates porattam seithal than posting poduvangala?

  ReplyDelete
 5. அப்படி என்ன செல்லதுரை ராஜலிங்கம் அவங்கள கூப்பிடுங்க சூப்பரா பண்ணுவாங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி