7-வது நாளாகப் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்: குடிநீர், மின்சார வசதிகள் துண்டிப்பு. - kalviseithi

Feb 10, 2021

7-வது நாளாகப் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்: குடிநீர், மின்சார வசதிகள் துண்டிப்பு.

பணி நிரந்தரம் வழங்கக் கோரி, பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சென்னையில் 7-வது நாளாகத் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் கல்விசார் இணைச் செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு பகுதி நேரச் சிறப்பாசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தில் 12,483 பேர் பகுதி நேரச் சிறப்பாசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். ஓவியம், தையல், இசை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பாடங்களை இவர்கள் கற்பித்து வருகின்றனர். வாரம் இரண்டு நாட்கள் பணியுடன், மாதம் ரூ.7,700 ரூபாய் சம்பளம் பெற்று வந்தனர்.

அண்மையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ரூ.7,700-ல் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தித் தமிழக அரசு அறிவித்தது. வாரத்தில் மூன்று நாட்கள் முழுவதுமாகப் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே பகுதி நேரச் சிறப்பாசிரியர்களுக்குத் தொகுப்பூதியத்துக்குப் பதிலாக பணி நிரந்தரம்தான் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். சென்னை டிபிஐ வளாகத்தில், கடந்த 4-ம் தேதி இந்தப் போராட்டம் தொடங்கியது.

இந்நிலையில், 7-வது நாளாகத் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண் ஆசிரியர்கள் அதிக அளவில் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள சூழலில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகப் பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பணி நிரந்தரம் வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அனைத்துப் பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

15 comments:

 1. சீப்ப மறச்சி வச்சிட்டோம் ல கல்யாணம் நின்னுறும்

  ReplyDelete
 2. I support part time teacher Na 2017 spl tecahers exam la pass candidate apo spl teacher vacant 3000 near ku exam vachi posting la fraud paniga ipo part time teachers permanent pana nearly avaga vacancy 4000 already vacancy la iruka post nu nearly 7000 post varum I support part time teacher indha atchiku oru mudiva kattanum

  ReplyDelete
  Replies
  1. Me also support part time teacher avaga 10 year kasta paduraga.avagala permanent pana nearly nega soilara 7000 vacancy varum adha govt fill pananum me also support part time teacher

   Delete
 3. Sir pls support part time teacher naga yega life kaga pordurom but yega velayum yemathala na part time teacher ah Salem la iruka ye work weekly 3 days adha Monday Tuesday Wednesday nu mudichitu ipo chennai la strike kaladhuka poitu iruka

  ReplyDelete
 4. நாமக்கல் இருந்து திருப்பூருக்கு வேதியியல் முதுகலை ஆசிரியருக்கு mutual transfer விருப்பம் இருந்தால் Reply செய்யவும்...

  ReplyDelete
 5. We want seniority basis appointment for physical education teacher. 1999 batch request (atleast 5% )

  ReplyDelete
 6. Sagum vara porada veandum ...vidavay kuadadhu angiya irruka veandum varadhinga ..angiya irrunga evalvu asigam nam pattchu adhana Peru face la Kariya poosa veandum..but exam mattum veandam...

  ReplyDelete
  Replies
  1. Dai paithiyam yenda yenada unoda prachana ne pesanadhula ok adhulanyenada anagaye iruga varadhiga nu soilra paithiyam apo ne part time teacher illa nu naila vey theriyudhu thirutu thanam panalum theliva pananum da velakenna

   Delete
 7. part time teacher ku mattum exam vaika veandum adhula pass pandravagaluku mattum job...idha Panna veandum nambalum nermaiya ulla poga veandum...

  ReplyDelete
 8. https://chat.whatsapp.com/It6f7th3kOdGwsWjz8aiQ4
  அனைத்து முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 2018-2019 நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சாரிபார்த்து முடிக்கப்பட்டு 2020 பிப்ரவரி மாதத்திலிருந்து பணி வழங்கிடத் தொடர்ந்து நமது கோரிக்கையை பல்வேறு வகையில் வைத்து வருகிறோம். இந்நிலையில் *தமிழ்நாடு ஆசிரியர் சங்க* *மாநிலத் தலைவர் மரியாதைக்குரிய திரு.இளமாறன் அய்யா அவர்கள்* முதல்வரின் கவனத்திற்கும், ஊடங்களில் வெளிவருவதற்கும் பல்வேறு வேலைப் பலுவிற்கு மத்தியிலும் நமக்கானப் பணி வாய்ப்பினைப் பெற்றுத் தந்திடப் பக்க பலமாக உறுதுணையாக இருந்து வருகிறார். மேலும் நமது கோரிக்கை முழுமையடைய வேண்டுமெனில் அய்யாவின் ஆலோசனையின் படி நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயல் பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் பொருட்டு ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் (போராட்டம் இல்லை) *அய்யா அவர்களின் முன்னிலையிலும் , காவல் துறையினர் அனுமதி பெற்றும்* நடத்திட நமது குழு நிர்வாகிகள் அய்யாவின் அலோசனைப்படி திட்டமிட்டுள்ளனர். நம் குழுவில் உள்ள அனைத்து ஆசிரியர் நண்பர்களும் கலந்து ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே நம் கோரிக்கையினை கொண்டு சென்று நமக்கானப் பணியினைப் பெற்றிட முடியும். அனைவரும் ஒத்துழைப்பு தாரீர்.நன்றி.

  ReplyDelete
 9. https://chat.whatsapp.com/It6f7th3kOdGwsWjz8aiQ4

 10. https://chat.whatsapp.com/It6f7th3kOdGwsWjz8aiQ4

 11. இந்த அரசு, வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்துள்ளது.... தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தான் வேலைக்கு வரவேண்டும் என்று கொண்டு வந்தார்கள். அதில் தேர்ச்சி பெற்ற பின்பு 40 வயதைக் கடந்தவர்களுக்கு வேலை இல்லை என்ற ஆணையை வெளியிட்டுள்ளார்கள்.... 7 ஆண்டுகளாக வேலையில்லாமல் செய்துவிட்டு இப்போது 40 வயதைக் கடக்க வைத்து வேலையில்லை என்கிறார்கள்... கேட்டால் வயது அதிகம் ஆகியதால் சரியாக வேலை செய்யமாட்டார்கள் என்கிறார்கள்... விரைவில்... விரைவில்... என்று கூறி வடை சுடும் இவர்கள் திறம்பட கல்வித்துறையை கொண்டுசெல்கிறார்களா?... சீனியாரிட்டி வேலையை ஒழித்தார்கள்... தகுதித்தேர்விலும் வேலைவாய்ப்பையும் ஒழித்துவிட்டார்கள். 40 வயதைக் கடந்தவர்களுக்கும் வேலையை ஒழிக்கிறார்கள்.. இதைப் பார்த்து யாராவது பொங்குகிறோமா????? பகுதி நேர ஆசிரியர்களை மட்டும் பார்த்து பொங்குகிறோம்?? உங்களுக்கானதை கேட்டாலும் கிடைக்காத இந்த ஆட்சியாளர்களிடம் கேளுங்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி