ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2021

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.

 


பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளுக்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை


கோபியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ேநற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


நீட் தேர்வுக்கு 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால் தற்போது 5 ஆயிரம் பேர் தான் பயிற்சி பெற்று வருகின்றனர். அது அவர்கள் விருப்பம். டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் போன்றவர்களுக்கு மட்டும் தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஆசிரியர்களுக்கு மத்திய அரசு கூறிய பிறகு தடுப்பூசி போடப்படும். பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளுக்கு தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அப்படி சுத்தம் செய்யாத பள்ளிக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


பிளஸ்-1 பொதுத்தேர்வு


மற்ற வகுப்புகள் திறப்பது குறித்து முதல்-அமைச்சர் தான் அறிவிப்பார். பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின்னர் அறிவிக்கப்படும்.


இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

6 comments:

  1. Aided school case ah vapas vanguga sir

    ReplyDelete
  2. youtube channel fundamentals of neet and jee.pls share it if any students you know
    https://youtube.com/channel/UCr0DOrdlSXxBV8nl5Y4SCNA

    ReplyDelete
  3. ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி, டெட் pass ஆனவர்களுக்கு விஷ ஊசி போடுங்க அமைச்சர் அவர்களே, வேலை தான் கொடுக்க மனம் இல்லை, நல்ல மரணமாவது கொடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Neenga evlo mana ulachal eruntha epadi solluvinga

      Nanum athea mind la tha erukean

      2013,2017 tet pass panniyum Vela illa Vera velaiyum kedaikala


      Nammala oru manusana kooda society mathikala

      Entha government nammala koopttu oru bottle vesatha kodutha kooda kudichettu setharalam pola

      Delete
  4. எங்களுக்கு முன் மாதிரியா அமைச்சர்
    நீங்க முதல்ல ஊசி போட்டாங்க

    ReplyDelete
  5. ஊசி போட்டுக்கொளாவது அவர்அவர் விருப்பம் கட்டாயப்படுத்த முடியாது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி