உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு. - kalviseithi

Feb 28, 2021

உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு.

 


இந்திய அரசின் மனிதவளத் துறையின்கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM-2021 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


தேர்வு: UGC-NET EXAM-2021


தகுதி: கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறையைச் சேர்ந்த ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC, ST, OBC, Non-Creamy Layer பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


வயதுவரம்பு: NET தேர்வு எழுதி கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு உச்ச வயதுவரம்பில்லை. இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள்(JRF) 31 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, ST,OBC, PWD, Transgender பிரிவினருக்கு 5 ஆண்டு சலுகை வழங்கப்படும்.


எழுத்துத் தேர்வு முறை:  NET தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாள் 100 மதிப்பெண்கள் கொண்டது. விண்ணப்பத்தாரரின் கற்பிக்கும் திறனை சோதிக்கும் வகையில் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு 1 மணி நேரம் கொண்டதாக இருக்கும். இரண்டாம் தாள் 200 மதிப்பெண்கள் கொண்டது. 100 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். தேர்வு 2 மணி நேரம் கொண்டதாக இருக்கும். தேர்வு கணினி வழி ஆன்லைன் தேர்வாக இருக்கும். 


தமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குசி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர்


விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, OBC,EWS பிரிவினர் ரூ.500, SC,ST,PWD,Transgender பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.ntanet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2021


மேலும் விவரங்கள் அறிய www.ntanet.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

5 comments:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete
 2. www.apexcareacademy.com

  Pg trb Physics

  Online class and test

  Admission going on

  Mb 8807432425

  ReplyDelete
 3. last date see 2/3/21 its correcta

  ReplyDelete
 4. Advertisement eppa vanthuchu

  ReplyDelete
 5. Ethu yethukuda vaikiringa posting poda matintringa apparam yeathukku exam

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி