கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு, பெற்றோர் விருப்பப்படி, தந்தை அல்லது தாயின் ஜாதி அடிப்படையில், ஜாதி சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு, அவர்களின் தந்தை அல்லது தாய் சார்ந்துள்ள ஜாதியை குறிப்பிடாமல், பெற்றோர் விரும்பும் ஜாதிக்குரிய சான்றிதழ், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என்று வழங்கப்பட்டது.இதற்கு பதிலாக, பெற்றோர் குறிப்பிடும் ஜாதியை குறிப்பிட்டு, குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
அதை ஏற்று, பெற்றோர் விருப்பப்படி, கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு, தந்தை அல்லது தாயின் ஜாதியை குறிப்பிட்டு, அதன் அடிப்படையில், ஜாதி சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் சந்திரமோகன் பிறப்பித்து உள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி