அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது - முதல்வர் அறிவிப்பு!!! - kalviseithi

Feb 1, 2021

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது - முதல்வர் அறிவிப்பு!!!

 


செ.கு. எண் : 25 நாள் : 01.02.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி K பழனிசாமி அவர்களின் அறிக்கை - 1.2.2021 மத்திய அரசு 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி ஆணையிட்டவுடன் , இந்தியாவிலேயே முதல் மாநிலமாக , தமிழ்நாட்டிலும் ஊதியக்குழுவை அமைத்து , அதன் பரிந்துரைகளை உரிய காலத்திலேயே பெற்று , ஒரே மாதத்தில் அதனை பரிசீலித்து , மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் வழங்கி ஆணையிட்டது . அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு என்றுமே புறந்தள்ளியது இல்லை . 

மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியை அவ்வப்போது சந்தித்து வந்த போதிலும் , மக்களுக்கான பணியை அரசு ஊழியர்கள் ஊக்கமுடன் செய்ய வேண்டுமென கருதிதான் , அவ்வப்போது ஊதிய உயர்வு , அகவிலைப்படி போன்றவற்றை உடனுக்குடன் வழங்கி வருகிறது . கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் கூட சில மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தது | நிறுத்தி வைத்தது . ஆனால் , தமிழ்நாடு அரசு அந்த கடுமையான நிதி நெருக்கடியிலும் எந்த அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்தையோ , அகவிலைப்படியையோ குறைக்கவில்லை . எந்த தாமதமும் இன்றி வழங்கியது . 

இந்த முயற்சிகள் எல்லாம் , அரசு ஊழியர்கள் கட்டுப்பாட்டோடு செயல்படுவது மக்களின் நலனுக்கு அவசியம் என்பதாலும் , அத்தகைய அரசு ஊழியர்கள் தங்கள் பணியை ஊக்கமுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதால்தான் . இந்நிலையில் , அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது போன்றவை நிர்வாக கட்டுப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பதுடன் , மக்கள் பணிக்கும் பாதகம் ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்துதான் , இத்தகைய போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு கோரி வருகிறது . எனினும் , அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்கள் , ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி ஊதியத்திற்குரிய 21 மாதகால நிலுவைத் தொகை வழங்க வேண்டும் , புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் , சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் , பணியாளர் பகுப்பாய்வு குழுவினை அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை புதிய 2 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து வந்தனர் . அவற்றுள் , சில பணியாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து , அத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது . இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக , மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் , மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் , நிர்வாக கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது . அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக , 7,898 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . இது தவிர , சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17,686 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 408 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன . பின்னர் , அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர் . அதே போன்று , 2,338 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு , பின்னர் மீளப் பணியார்த்தப்பட்டனர் . மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது அப்போராட்டத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது , போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது . இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து , நீதிமன்றத்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . 

இந்நிலையில் , அரசு ஊழியர்களும் , ஆசிரியப் பெருமக்களும் தங்களுடைய போராட்டங்களை உடனடியாக கைவிட்டு , மக்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென 29.1.2019 அன்று நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன் . இதனையடுத்து , வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் , தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொள்வதாக 30.12019 அன்று அறிவித்து , உடனடியாக பணிக்கு திரும்பினர் . அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும் , வழக்குகளையும் திரும்ப பெற , அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஏற்கனவே என்னிடம் 3 நேரில் கோரிக்கை வைத்திருந்தனர் . 

இன்று ( 1.2.2021 ) , தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் , மாண்புமிகு மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து , மேற்கூறிய தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர் . மாண்புமிகு அமைச்சர் அவர்களும் , இது குறித்து எனது கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக அச்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்கள் . இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து , மறப்போம் , மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு , வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு , நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் மாண்புமிகு அம்மாவின் அரசு கைவிடுகிறது . அரசு எடுத்துள்ள இந்த நல்ல முடிவை ஏற்று , அரசு வாழியர்களும் ஆசிரியர்களும் , மேலும் ஊக்கமுடனும் , ஆக்கமுடனும் சிறப்பாக மக்கள் பணி மற்றும் கல்விப்பணியை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

 K. பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர் 

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9


33 comments:

 1. நீ என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் உனக்கு ஓட்டு இல்லை சாமி

  ReplyDelete
 2. நீ என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் உனக்கு ஓட்டு இல்லை சாமி

  ReplyDelete
 3. மிக்க நன்றி முதல்வரே

  ReplyDelete
 4. Sir aided school case sa konjam vaapas vangunga.please

  ReplyDelete
 5. Election varunthula
  Athan ethu mathri announcement,

  But ellarukum theriyum
  Ungaluku vote Panna koodathunu

  ReplyDelete
 6. Viraivil January end

  Viraivil February 15

  Viraivil march end

  After 3 months
  Aparam viraivil next government

  Ungaluku vaaipu illa raja

  ReplyDelete
 7. அணையும் விளக்கு மிகவும் பிரகாசமாக எரியும்,

  விரைவில் அஸ்தமனமாகி சூரியன் உதிக்கும்

  ReplyDelete
  Replies
  1. இங்க‌ பாரு..
   ப‌ழ‌னிசாமி பம்முராரு..
   அன்றைக்கு 5 வ‌குப்பு வாத்தியாரு 1 இல‌ட்ச‌ம் ச‌ம்ப‌ள‌ம் வாங்குறாருன்னு வாய் கூசாம‌ நீ சொன்ன‌ கீழ்த்தர‌மான‌ பொய்யையும்,அத‌ன் மூல‌மா பொது ம‌க்க‌ளிட‌ம் ஆசிரிய‌ர்க‌ள்,அர‌சூழியர் குறித்து உன் அர‌சாங்க‌ம் ஏற்ப‌டுத்திய‌ த‌வ‌றான‌ பிம்ப‌த்தையும்,
   எங்க‌ளை ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் போன்று ந‌ட‌த்திய‌தையும் எந்த‌ மான‌முள்ள‌ ஆசிரியரோ,அர‌சூழியரோ அவ்வ‌ள‌வு எளிதில் ம‌ற‌ந்து விட‌ மாட்டார்க‌ள்...
   இன்ற‌ளவும் நாங்க‌ள் அத‌னை அனுப‌வித்து வ‌ருகிறோம்..
   த‌ண்ட‌னை மிக‌ விரைவில்.....

   Delete
  2. நானும் மான‌முள்ள‌ த‌மிழ‌ன்..

   Delete
 8. வழக்குகளை ரத்து செய்ய தெரிந்த உங்களுக்கு,
  ஏன் அவர்களது ஒரு சில நியாயமான கோரிக்கைகளை தீர்த்து வைக்க தெரியவில்லை,

  2013, 2017, 2017 தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் நியமனத்திற்கு ஏன் செவிசாய்க்கவில்லை

  அவரவர் விதைத்ததை நிச்சயமாக அவரவர் தான் அறுவடை செய்ய வேண்டும், நீங்கள் விதித்ததை விரைவில் நீங்கள் அறுவடை செய்வீர்கள்

  ReplyDelete
 9. பைத்தியமா இவன் ரொம்ப நேரம் நல்லா தான் பேசிகிட்டு இருந்தான்பாவம் யாரு பெத்த புள்ளையோ விரைவில் விரைவில் சொல்லி பைத்தியமாகி விட்டான்

  ReplyDelete
 10. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆடு மாடுகளை வழங்க முதலமைச்சர் இடம் ஆலோசனை விரைவில் அட்டவணை வெளியிடப்படும்

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைவரும் உங்களுக்கு என்ன செய்தார்கள் எப்போதுமே தரக்குறைவாக பேசுகிறீர்கள். தாங்கள் அரசு ஆசிரியர் பணியை பணம் கொடுத்து சென்றுள்ளீர்களா? இனிமேல் அதிகமாக பேசினீர்கள் என்றால் மரியாதை கிடைக்காது.. ...

   Delete
  2. நானும் பாதிக்கப்பட்ட உங்களில் ஒருவன் என்ன பண்ணுவது என்னுடைய மனக்குமுறல், (2013&2017) தேர்ச்சி பெற்றவன்.மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரைவில் விரைவில் என்று சொல்லியே கோபத்துக்கு ஆளானவன்.

   Delete
 11. பகுதிநேர ஆசிரியர்கள் பிரச்சனை மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஒரு பிரச்சினையை பற்றியும் முதல்வர் ஏதாவது முடிவு அறிவிப்பாரா

  ReplyDelete
  Replies
  1. பகுதி நேர ஆசிரியர்களுக்கு வாய்ப்பில்லை...

   Delete
  2. Thanks mr unknown thanks for your wishes

   Delete
 12. Pg trb second list podungal sir please all are very affected because hard work caditate pl god help 2019 patch

  ReplyDelete
 13. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

  ReplyDelete
 14. பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் 7500 லிருந்து 10000 மாக் உயர்வு

  ReplyDelete
 15. இந்த அரசாங்கம் நல்லா வாழுறவனதான் வாழ வைக்கும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வாழ்வை நாசமாக்கி குட்டி சுவராக்கியதுதான் இந்த ஆட்சியின் சிறப்பு சாதனை.போராட்டம் செய்த ஆசிரியர்கள் வழக்கை ரத்து செய்றிங்க சரி அவர்கள் போல்தான் நாங்களும்.அவங்களாவது மாதமாதம் ஊதியம் பெறுகின்றனர். நாங்க? எங்கள்அழுகுரல் தங்கள் காதுகளில் கேட்க வில்லையா? இது அனைத்திற்கும் காரணம் சரியான பணி நியமன முறையை பின்பற்றாத அம்மா ஆட்சி.மக்கள் திலகம் M.G.Rஅவர்களோ வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் செய்தார்.அம்மா அவர்கள்திறமைக்குதான் பணி என்று கூறி தகுதி தேர்வு வைத்தார்.அதலும் நாங்க தேர்ச்சி பெற்றோம்.ஆனால் பணி இல்லை.இந்த அம்மா ஆட்சி மக்கள் திலகம் அவர்களை பின்பற்றலாமே!தேர்வு என்ற பெயரில் ஊழல் செய்யத்தான் தெரியுமா? எங்க வலி வறுமை வேதனை தங்களால் உணரமுடியாதா??????????

  ReplyDelete
 16. இந்த அரசாங்கம் நல்லா வாழுறவனதான் வாழ வைக்கும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வாழ்வை நாசமாக்கி குட்டி சுவராக்கியதுதான் இந்த ஆட்சியின் சிறப்பு சாதனை.போராட்டம் செய்த ஆசிரியர்கள் வழக்கை ரத்து செய்றிங்க சரி அவர்கள் போல்தான் நாங்களும்.அவங்களாவது மாதமாதம் ஊதியம் பெறுகின்றனர். நாங்க? எங்கள்அழுகுரல் தங்கள் காதுகளில் கேட்க வில்லையா? இது அனைத்திற்கும் காரணம் சரியான பணி நியமன முறையை பின்பற்றாத அம்மா ஆட்சி.மக்கள் திலகம் M.G.Rஅவர்களோ வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் செய்தார்.அம்மா அவர்கள்திறமைக்குதான் பணி என்று கூறி தகுதி தேர்வு வைத்தார்.அதலும் நாங்க தேர்ச்சி பெற்றோம்.ஆனால் பணி இல்லை.இந்த அம்மா ஆட்சி மக்கள் திலகம் அவர்களை பின்பற்றலாமே!தேர்வு என்ற பெயரில் ஊழல் செய்யத்தான் தெரியுமா? எங்க வலி வறுமை வேதனை தங்களால் உணரமுடியாதா??????????

  ReplyDelete
 17. Part time teacher ku vachagala periya appu

  ReplyDelete
 18. இங்க‌ பாரு..
  ப‌ழ‌னிசாமி பம்முராரு..
  அன்றைக்கு 5 வ‌குப்பு வாத்தியாரு 1 இல‌ட்ச‌ம் ச‌ம்ப‌ள‌ம் வாங்குறாருன்னு வாய் கூசாம‌ நீ சொன்ன‌ கீழ்த்தர‌மான‌ பொய்யையும்,அத‌ன் மூல‌மா பொது ம‌க்க‌ளிட‌ம் ஆசிரிய‌ர்க‌ள்,அர‌சூழியர் குறித்து உன் அர‌சாங்க‌ம் ஏற்ப‌டுத்திய‌ த‌வ‌றான‌ பிம்ப‌த்தையும்,
  எங்க‌ளை ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் போன்று ந‌ட‌த்திய‌தையும் எந்த‌ மான‌முள்ள‌ ஆசிரியரோ,அர‌சூழியரோ அவ்வ‌ள‌வு எளிதில் ம‌ற‌ந்து விட‌ மாட்டார்க‌ள்...
  இன்ற‌ளவும் நாங்க‌ள் அத‌னை அனுப‌வித்து வ‌ருகிறோம்..
  த‌ண்ட‌னை மிக‌ விரைவில்.....

  ReplyDelete
 19. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி