ஆசிரியர்களின் தொடர் போராட்டம் காரணமாக, சென்னை டிபிஐ வளாகம் போராட்டக்களமானது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2021

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் காரணமாக, சென்னை டிபிஐ வளாகம் போராட்டக்களமானது.

 


பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள், டிபிஐ வளாகத்தில் 9-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, பகுதிநேர ஆசிரியர்களும் இதே வளாகத்தில் 3-வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.


2012ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் 12 ஆயிரத்து 483 உடற்கல்வி, ஓவியம், தையற்கலை பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இரு போராட்டங்களிலும் சுமார் 400 ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இரவு, பகல் பாராமல் வெயில், பனியை பொருப்படுத்தாமல் ஆசிரியர்கள் போராடும் நிலையில், இதுவரை அரசு தரப்பிலிருந்து யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து தெரிவித்துள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள், ''பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் எங்களுக்கு அரசு தங்களது பணி சேவையை கருத்தில் கொண்டு எங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும்'' என வலியுறுத்தியுள்ளனர்.

12 comments:

  1. DMK arivikai vitadhum vivasaya kadan thalupadi sari 12000 kodi thallupadi pana mudiyum 10 varusama kastapadra teacher adhu spl students ku teach pandra teacher ah permanent pana unga kita kasu illa

    ReplyDelete
  2. 2013 la tet pass pannavanga paper 1 certificate verification poitu vanthavanga poratam pannunga.. Appo than oru mudivu varum..

    ReplyDelete
    Replies
    1. Porattam pannunganu mathavangala solra

      Nee enna Panra

      மத்தவன் போராடணும் உனக்கு வீட்ல இருந்து வேலை கிடைக்கணுமா

      எவனாச்சும் போராடனும் உனக்கு வீட்ல இருந்து வேலை வேணும் அப்படித்தானே,

      நான் tet pass illa
      But tet candidate Ku kandipa velai kodukkanum


      ஆனா உன்னை மாதிரி ஆளுங்க எந்தவித போராட்டத்தில் கலந்துக மாட்டீங்க
      மத்தவங்க போராடி அதுல gain pannanum

      Delete
    2. Hello Mr. Unknown already I have govt job. Avangaluku oru idea kuduthen. Avlo than. Because 2013 paper 1 1000 vacancy than potanga. Aduthu 8 years ah posting pidavae illa.. Athunala sonen.

      Delete
  3. Replies
    1. Govt aided school teacher aa your appointment date

      Delete
  4. 2013 டெட் பாஸ் பண்ணவங்களுக்கு வர போகிற தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு.போராடித்தான் வேலை வாங்கனும்.

    ReplyDelete
  5. ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.

    ReplyDelete
  6. இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் லட்சத்தை ஒட்டி பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்த ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்கள் கால்வயிற்றுக்கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் வெறும் 7700-ஐ வைத்துக் கொண்டு பத்தாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களோடு பணியிடங்களைக் குறைத்துவிட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உபரி எனக் காட்டுகின்றனர். தகுதித் தேர்வில் மிக கடின உழைப்பில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் போராடிவருகின்றனர். எல்லாவற்றிற்கும் விரைவில்... விரைவில் என்று கூறி ஆட்சியின் இறுதிக்கு வந்துவிட்டது.

    ReplyDelete
  7. நீ வேலை கிடைத்ததும் உன் பிள்ளையை தனியார் பள்ளியில் படிக்க வெப்ப. உனக்கு இங்க வேலை வேணும். வேலை மட்டும் அரசாங்க வேலை . ஆனா நீங்க உங்கள் நம்பாம உங்க பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பீங்க. உங்க பிள்ளைகளை கொரோனா சமயத்தில் பள்ளிக்கூடம் அனப்புவீங்க. ஆனா நீங்க வந்தா கொரோனா வந்துடும்னு சொல்லி அரசாங்க பள்ளிகூட குழந்தைகள வரச் சொல்ல மாட்டீங்க. ஏனா நீங்க வேலைக்கு வரணும்.

    ReplyDelete
  8. தேர்வுக்கான ஆண்டு ஆட்டவணை எப்போது........சத்தியமாக நடக்காதுபோல.....

    ReplyDelete
  9. 2013 tet passed candidates ...yematram

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி