தேர்வு ரத்து அறிவிப்பை எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு தொடர முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2021

தேர்வு ரத்து அறிவிப்பை எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு தொடர முடிவு.

 


பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பால், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. நீதிமன்றத்தை நாட, முடிவு செய்துள்ளன.


கொரோனா தாக்கம் குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், தேர்தல் பிரசாரங்களிலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கின்றனர். இந்நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்திருப்பது, பெற்றோருக்கும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அடிப்படை கல்வியான, 10ம் வகுப்பை கூட, 'ஆல் பாஸ்' என்று அறிவித்தால், உயர் கல்விக்கு செல்லும் போது, பாதிப்புகள் ஏற்படும். பத்தாம் வகுப்பில் இருந்து, பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில், மாணவர்களை சேர்க்கும் போது, எந்த மதிப்பெண் அடிப்படையில் சேர்ப்பது என்பதிலும் பிரச்னை ஏற்படும் என, பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை கூட நடத்தாமல், மாணவர்களை எந்த வகையில் மதிப்பிட்டு, தேர்ச்சி வழங்குவது என்றும், கேள்வி எழுந்துள்ளது.


இதுகுறித்து, தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது: கடந்த ஆண்டு, 10ம் வகுப்பில் தேர்வே எழுதாமல், 'ஆல் பாஸ்' ஆன மாணவர்களுக்கு, இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்பிலும் பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு, பொது தேர்வு எப்படி இருக்கும் என்றே, தெரியாத நிலை உள்ளது.


அதனால், இந்த ஆண்டு பிளஸ் 1ல் தேர்ச்சி பெறும் மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுவதில், கடும் சிரமப்படுவர். மேலும், மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வு, ஜே.இ.இ., தேர்வு போன்றவற்றையும் எழுத தெரியாமல் தவிக்க நேரிடும். எனவே, பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பை, உடனே வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வழக்கு தொடர முடிவு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் அருணன் கூறுகையில், ‛'10ம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் செல்ல, மதிப்பெண் தேவை. எனவே, பள்ளி அளவிலான தேர்வாவது நடத்தி, மதிப்பெண்ணை நிர்ணயிக்க வேண்டும்,'' என்றார். 'தேர்வு ரத்து முடிவை, அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர முயற்சிக்கப்படும்' என, பள்ளி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

24 comments:

  1. முட்டாள்களின் கையில் நாடு உள்ளது. பல கை தட்டினால் தான் ஓசை.விழித்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு கெட்டவன் கையில் நாடு இருப்பதை விட ஒரு முட்டாளின் கையினால் இருப்பதுதான் மிகவும் ஆபத்தானது. மிக மிக ஆபத்தான சூழலில் தான் நாம் இருக்கிறோம் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

      Delete
  2. கலகம் செய்தால் வழி பிறக்கும்.பலரை யோசிக்க வைக்கும்.

    ReplyDelete
  3. 1. பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பால் ஏற்படும் முதல் பாதிப்பு என்னவென்றால் பல மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற நிபந்தனை இருந்தாலும் தேர்வுதான் இல்லையே என்கிற மெத்தனத்தில் பல மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். அவர்கள் மீண்டும் மளிகைக்கடைகளுக்கு பொட்டலம் கட்டவோ, தறிப்பட்டறை களுக்குச் சென்று தறி ஓட்டவோ, அல்லது அலைபேசியில் பப்ஜி விளையாடி அதனால் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு அகால மரணமடையவோ, அல்லது அதை அலைபேசியில் வயதுக்கு மீறிய ஆபாச படங்கள் பார்க்கவோ சென்று விடுவார்கள். காரணம் விடலைப்பருவத்தில் அவர்களிடம் ஏற்படும் அதிகப்படியான ஹார்மோன் மாற்றங்களுக்கு நல்ல மாற்று சக்தியாக அவர்களின் கல்விச் செயல்பாடுகள் மட்டுமே இருக்க முடியும். பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பால் கல்விச் செயல்பாடுகள் தடைபட்டு மாணவர்கள் சீரழிவை நோக்கிச் செல்வதில் எள்ளளவும் ஐயமில்லை.

    2. இதன் அடிப்படையில் இந்த அரசு ஒன்பது பத்து பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்தது என்பதற்கான விளக்கம் போதிய அளவில் கொடுக்கப்படவில்லை. பொது முடக்கம் அமலில் இருந்த போதே இந்த வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை பல தனியார் பள்ளிகள் நடத்தியுள்ளன. பொது முடக்கம் தளர்வு ஏற்பட்டு பள்ளிக்கு மாணவர்கள் வரத் தொடங்கிய இந்த நிலையிலும் கிட்டத்தட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும் சிலபஸ் முடிக்கப்பட்டுவிட்டது. அரசுப் பள்ளிகளிலும் கூடமுக்கால்வாசி சிலபஸ் முடிக்கப்பட்டுவிட்டது, தேர்வில் பின்னும் கிட்டத்தட்ட அறுபது எழுபது நாட்கள் உள்ளன. மாணவர்களுக்கு பாடத்திட்ட குறைப்பின் அடிப்படையில் தேர்வு நடத்தினால் கட்டாயம் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற முடியும்.
    3. ஏற்கனவே பொது முடக்கம் முடக்கம் என்கிற பெயரில் பலரது வாழ்வாதாரத்தை இந்த அரசு நாசப்படுத்தி விட்டது. இந்த பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்போதுதான் மாணவர்கள் பள்ளிக்கு வரத்தொடங்கி பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் என் பாதி சம்பளம் வாங்கிக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை தொடங்கி உள்ளனர். இந்த தேர்வு ரத்து அறிவிப்பு நிச்சயம் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பழையபடியே படுகுழியில் தள்ளும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பல ஆசிரியர்களை முறுக்கு விற்கவும், தள்ளுவண்டி கடைகள் நடத்தவும் செய்த சாதனையின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் அடுத்த சாதனை செய்ய அரசு தயாராகிவிட்டது.

    4.பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கு இந்த அரசு காட்டிய காரணம் மிகவும் பலவீனமாகவே உள்ளது. ஏற்கனவே அரியர் தேர்ச்சி விவகாரத்தில் முதல்-அமைச்சருக்கு கட்அவுட் வைத்ததில் புகழ் போதை தலைக்கேறி ஒன்பது பத்து பதினொன்றாம் வகுப்பு மாணவர்களும் கட்அவுட் வைக்க வேண்டும் என்கிற ஆசையில் மாண்புமிகு முதலமைச்சர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் அந்த கட்டவுட் அவருக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டாரா என்றும் தெரியவில்லை.
    5. சிபிஎஸ்சி மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாதாம். ஒரே நாட்டில் கல்வி செயல்பாடுகளில் ஏற்படும் இத்தகைய மாறுபாடுகள், நாளை மாணவர்களுக்கு பெரும் பாதகமாக அமையும், நாளை சிபிஎஸ்சி மாணவர்கள் தேர்வு எழுதிய மதிப்பெண் சான்றிதழை கையில் வைத்திருப்பார்கள். ஸ்டேட் போர்டு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சிபெற்ற அறிவிப்பை தான் கையில் வைத்திருப்பார்கள். இத்தகைய மாறுபாடு கட்டாயம் பின்னாளில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஆகவே 9 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த திராணி இல்லை என்றாலும் பள்ளி அளவிலான தேர்வு நடத்தி கல்வி தரம் தாழ்ந்து போகாமல் தடுக்க வேண்டும் என்று மேதகு கல்வியாளர்களையும் மேதகு நீதிபதிகளையும் சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்.........

      Delete
    2. அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்....

      Delete
  4. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தளையிட முடியாது

    ReplyDelete
    Replies
    1. கொள்ைக முடிவில் தலையிட வேண்டாம். முட்டாள்தனமான அறிவிப்புகளில் தலையிடலாமே. இந்த அறிவிப்பு நியாயமாக இருக்கிறது என்பதற்கு ஒரு காரணம் சொல்லுங்கள்.

      Delete
    2. நியாயம் இல்லை ஆனால் சட்ட படி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது நீதிமன்றம் தளையிட முடியாது டெட் தேர்வின் தீர்ப்பு இதற்கு முன் உதாரணம்

      Delete
  5. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில் அந்த மாணவன் பதினொன்றாம் வகுப்பில் என்ன பாடப்பிரிவை எடுக்கலாம் என்பதற்கான தெளிவு இருந்தது.அதாவது சமூக அறிவியல் மற்றும் மொழிப் பாடத்தில் ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால், விரி சிந்தனை மிக்க அவன் காமர்ஸ் பாடப் பிரிவில் சேர்ந்து சாதனைகள் புரிய முடியும். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் ஒரு மாணவன் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால், குவி சிந்தனை மிகுந்த அம்மாணவன், அறிவியல் பாடப் பிரிவை தேர்ந்தெடுத்தால் அதில் அவன் சாதிக்க முடியும். இந்த மாதிரியான அடிப்படை விஷயங்களுக்குத் தான் தேர்வு என்ற ஒன்றை நாம் நடத்துகிறோம். விரி சிந்தனை குவி சிந்தனை என்றால் என்ன என்று நமது நாட்டின் கல்வி அமைச்சைரை கேட்டுப்பாருங்கள், அல்லது முதலமைச்சரிடம் தான் கேட்டுப்பாருங்கள், அவர்கள், உடனே யாரையும் கலந்தாலோசிக்காமல் பதில் சொல்லி விட்டார்கள் என்றால், இந்த பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பை நாங்கள் மனமார ஏற்றுக் கொள்கிறோம்.சூர முட்டாள்தனமான இந்த அறிவிப்பை மாண்புமிகு நீதிபதிகளாவது நமது சிந்தனையில் சீர்தூக்கி நல்ல முடிவை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  6. தமிழ் நாட்டின் தலையெழத்து!? தேர்வு ரத்து!!!

    ReplyDelete
  7. இன்னும் 2மணி நேரத்தில் தேர்தல் அறிவிப்பு அத்துடன் முதலமைச்சரின் அதிகாரம் முடிகிறது

    ReplyDelete
  8. குறைந்த காலத்தில் பாடத்தை படிக்க இயலாது. எனவே ஆல் பாஸ் தான் இதற்கு சரியான முறை

    நீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. ஆல்பாஸ் சரி என்றே வைத்துக்கொள்வோம்

      முந்தைய வருடங்களில் விடுப்பட்ட பாடங்களை எழுதும் தனித்தேர்வர்கள் நிலையை யோசித்தீர்களா?

      Delete
  9. அந்தந்த வருட படிப்பு அப்பப்ப படித்தாகனும்.படிப்பிலும் வாழ்க்கையிலும் சரியான நேரம் தவறாமை இருக்கனும்.காலம் திரும்ப வராது.பிள்ளைகள் தேர்வு எழுதனும்.மனது மாறி சோம்பேறித்தனத்திற்கு வழிவகை செய்திடும்.படிப்பில் பிள்ளைகள் வேகம் இருக்கனும்.

    ReplyDelete
  10. மறதி யாருக்கு பிள்ளைகளுக்கா? ஆசிரியருக்கா? முதலமைச்சருக்கா? படிப்பு பற்றிய விஷயங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்க அப்பாவுக்கு. எங்கள் முதல்அமைச்சர் உன்னை போல் முட்டால் அல்ல உங்க அப்பாகுத்த மறதி

      Delete
  11. அறிவை கூர்மையாக்கிக்கொண்டே இருக்கனுமே தவிர சில நாட்கள் மறதி என்பது கூடாது.

    ReplyDelete
  12. சூரியன் தினமும் உதயமானது போல் ஏட்டுக்கல்வியும் இருக்கனுமே தோழர்களே.

    ReplyDelete
  13. நீ தி.மு.க கட்சியை சேர்ந்தவன் என்று இதிலிருந்து தெரிந்தது

    ReplyDelete
  14. 11 பாடம் தான் த‌னியா‌ர் பள்ளியில் நடத்து kirarkala

    ReplyDelete
  15. ஊரே அம்மணத்துடன் இருக்க நீ மட்டும் வேட்டி கட்டி என்ன செய்ய போற ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி