முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் வயது வரம்பு நிர்ணயம்: பள்ளிக்கல்வித் துறை முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி - kalviseithi

Feb 24, 2021

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் வயது வரம்பு நிர்ணயம்: பள்ளிக்கல்வித் துறை முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் (டெட்) வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுத இதுவரை வயது வரம்பு ஏதும் இல்லாமல் இருந்து வந்தது. உரிய கல்வித்தகுதியுடன் 57 வயது உள்ளவர்கள் கூட தேர்வு எழுத முடியும்.


இந்த நிலையில், முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்பணிக்கு அண்மையில் வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அதன்படி பொதுப்பிரிவினருக்கு 40 மற்றும் எஸ்சி, எஸ்டி, பிசி,பிசி- முஸ்லிம், எம்பிசி வகுப்பினருக்கும் பொதுப்பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டு தளர்வு அளிக்கப்பட்டது.

இதற்கு பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் உட்பட ஆசிரியர் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து வயது வரம்பைநீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இதனிடையே முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு மார்ச் 1 முதல் தொடங்கவுள்ளது. இதனால் வயது வரம்பு குறித்தபுதிய அறிவிப்பின்படி நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது அமைச்சரின் வாக்குறுதியின்பேரில் தளர்த்தப்படுமா என்று முதுகலை பட்டதாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்தத் தேர்வுக்காகஏற்கெனவே தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்தவர்கள் பயிற்சியை தொடர்வதா வேண்டாமா என்று குழம்பிப்போயுள்ளனர்.

இதனிடையே மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) கட்டாயமாகும். இந்த தேர்வுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.தற்போது இதற்கும் வயது கட்டுப்பாடு கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை  முடிவுசெய்துள்ளது.

அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 40 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் 40 மற்றும் 45வயது கடந்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாலும் டெட் தேர்வில் தேர்ச்சிபெற்ற 40 வயதை கடந்தவர்களாலும் இனி அரசுப் பள்ளிகளில் பணிக்கு சேர முடியாது.

அதேநேரம் மத்திய அரசுபள்ளிகளில் பணியில் சேர்வதற்காக எழுதப்படும் மத்திய ஆசிரியர்தகுதித் தேர்வுக்கு (சி-டெட்) எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

21 comments:

 1. BUDDHA ACADEMY

  PGTRB HISTORY ONLINE COACHING

  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுகலை வரலாறு பணித் தேர்விற்கு இணையவழியில் (Online) வரலாறு பாடத்திற்கு எங்களது புத்தா அகாடமி தருமபுரி, மூலம் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளோம்.
  வகுப்புகள் 01.03.2021 முதல் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும்.
  இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
  இணையவழி சம்பந்தமான தகவல் தங்களது சேர்க்கை உறுதி செய்த பின் தனியாக தங்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்.
  குறிப்பு: நேரடி வகுப்பில் சேர விருப்பம் உள்ள ஆண் / பெண் இருபாலருக்கும் பாதுகாப்பான மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி வசதி செய்து தரப்படும்.

  எங்களது புத்தா அகாடமியில் வரலாறு பாடப்பிரிவுக்கு பயின்ற தேர்வர்களில் 2019 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வில் வரலாறு பாடப்பரிவில் 26 நபர்கள் தேர்ச்சி பெற்றும் 19.02.21 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரலாறு பாடப்பிரிவிற்கு வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட தேர்வு முடிவில் 5 தேர்வர்களில் 3 தேர்வர்களும்(19PG081808333 PREMKUMAR M / 19PG081306525 PRIYANGA P / 19PG083901966 SEENUVASAN M) மொத்தம் 29 நபர்கள் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளனர் அதில் மாநில அளவில் முதல் இடம்(19PG081812263 MOORTHI.M ) மற்றும் மூன்றாம் இடம்(19PG081808325 ADHIMOOLAM A) எங்களது புத்தா அகாடமி தேர்வர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

  இங்ஙனம்
  புத்தா அகாடமி,
  தருமபுரி.

  தொடர்புக்கு
  புத்தா அகாடமி
  இடம்: பிஷப் ஹவுஸ்
  ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
  +91 99620 27639 / +91 88380 72588

  YOUR SUCESS OUR AIM

  ReplyDelete
 2. வெந்த புண்ணில் வேலை
  பாய்ச்சுகிறார்கள்.

  ReplyDelete
 3. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete
 4. ஆளே இல்லாத கடையில யாருப்பா அங்க டீ போடுறது..

  ReplyDelete
 5. Intha newskku ad. thevaiya? ingu ellorum ithukku theirvu
  kidiakkatha ena kavalaiyil ullargal.Neengal business seigirirgl.

  ReplyDelete
 6. 😂🦊🐲🐉🦟🦞🐍🦎🐖🐻🐷🐖🐷🦌🐅🐆🐴🦄🦁🐯

  ReplyDelete
 7. Tet pass agama tholachrunthavathu nimmathiya tnpsc la select agirukkulam pola intha karumathula pass agi tholachathukku summa irukkalam. tn pallikalvthurai amaichar nalla irukkatum. Evlo nallthan avar nalla iruppar nu papom

  ReplyDelete
 8. I am very sad.Please tell me positive reply for writting TRB exam.

  ReplyDelete
 9. அறிஞர் அண்ணாவை போல் ஒரு தலைவர் தோன்றனும்.கேள்வி கேட்கனும்

  ReplyDelete
 10. மிக சரியாக சொன்னீங்க

  ReplyDelete
 11. எல்லோரும் ம்ஜிஆர் பாடலை கவனியுங்கள் எல்லாரின் உள்ளத்திலும் தலைவர் உள்ளார் எனவே நம் உரிமையை நாம் தட்டி கேக்கனும்

  ReplyDelete
 12. அரசு பள்ளிகள் ஏன் காணாமல் போகிறது.அதில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சம்பளத்தை மட்டும் கவனிக்கிறது.தனியொரு மனிதன் திருந்தனும்.அப்புரம் தலைவர்கள் தானே திருந்துவர்.நம்மூரில் நடக்கும் அநியாயங்களை நாமே தட்டி கேட்பதில்லை.தலைவர்களை பேச நாம் எதற்கு? நாம் மாற்றும்.

  ReplyDelete
 13. ஒவ்வொருவர் மனதிலும் அறிஞர் அண்ணா உள்ளார்.எதையும் தட்டி கேட்கனும்.ஐ லவ் இந்தியா பாட்டு கேளுங்கள் தைரியம் தானே வரும்.மாற்றம் எல்லோரிடத்திலும் தேவை என்பதை உணருங்கள்.

  ReplyDelete
 14. எதற்காக தனியார் பள்ளியை நாடுகிறோம் பெற்றோர்கள்.அதிக சம்பளத்தை வாங்கும் தூங்கும் ஆசியர்களை நம்பி பள்ளிக்கு எப்படி அனுப்புவோம்.

  ReplyDelete
 15. அரசாங்கத்தை குறை கூற நாம் யார்? மாற்றம் நம்மிடத்தில் தேவையல்லவா மனிதர்களே

  ReplyDelete
  Replies
  1. இது என்ன கேள்வி? அரசாங்கத்தின் நிறை குறைகளை கூற எந்த ஒரு குடிமகனுக்கும் உரிமையுண்டு.நம் அடிப்படை உரிமை.

   Delete
 16. இப்படி கேள்வியை கேட்டு பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று ஔவை பாடியுள்ளார்.

  ReplyDelete
 17. இப்படி நீங்கள் கேட்டால்தான் ஒவ்வொரு வீட்டிலும் தலைவர் உருவாகுவார்

  ReplyDelete
 18. Its last day for tet passed canditads

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி