10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படாது பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2021

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படாது பள்ளிக் கல்வித்துறை

 


10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்சி என்று அரசு அறிவித்துள்ள நிலையில்10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11-ம் வகுப்பில் சேருவதற்கேற்ப தேர்சி என்று மட்டுமே குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி அடைய செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு 9முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்சியடையச் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்சி என்று அரசு அறிவித்துள்ள நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் 11-ம் வகுப்பில் சேருவதற்கு தேர்சி என்று மட்டுமே மதிப்பெண் சான்றிதழிலில் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் இந்த ஆண்டு 11-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பாடங்களுக்கான மதிப்பெண்கள் மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்படாது என்றும் 11-ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகள் அவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கேற்ப பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. தபால் நிலையங்களில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இன்னும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது இந்த கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்கள் இந்த வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்படும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி