10,11,12 ஆம் வகுப்பு இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் - விவரம் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2021

10,11,12 ஆம் வகுப்பு இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் - விவரம் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.

  


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12 - ஆம் வகுப்பு பயிலும் மாணவ , மாணவியரின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு , சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்முறைப்படுத்தப்பட்டுவருகிறது. மேற்காண் திட்டத்தின்படி 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை 6 முதல் 12 ஆம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை தொடராத இடையில்நின்ற மாணவியர் எண்ணிக்கை விவரங்களை வருடவாரியாக வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே இக்கடித்துடன் இணைத்தனுப்பப்படும் படிவத்தில் இடையில் நின்ற ( Dropout ) மாணவ , மாணவியரின் எண்ணிக்கை விவரங்களை பூர்த்தி செய்து 19.03.2021 க்குள் இவ்வியக்கக ' கே'பிரிவு ( Email ) முகவரிக்கு ( ksec.tndse@nic.in ) அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


இணைப்பு : படிவம்

1 comment:

  1. 10, 11 வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு நடைபெறுமா என்று சொல்லுங்க சார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி