தேர்தல் பணிச்சுமையை சமாளிக்க ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்ட் - கலெக்டர்கள் நிரப்பிக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி - kalviseithi

Mar 3, 2021

தேர்தல் பணிச்சுமையை சமாளிக்க ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் இளநிலை உதவியாளர் டைப்பிஸ்ட் - கலெக்டர்கள் நிரப்பிக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி

 


தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 26. தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.


இதனால் அனைத்து  மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. வருவாய் துறை அலுவலர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காலி பணியிடம், பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவாற்றல் தேர்தல் பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் பணிச்சுமையை சமாளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள எண்ணிக்கையில் ஒப்பந்த உதவியாளர்கள், டைப்பிஸ்டுகள், பதிவறை எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணியிடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களான கலெக்டர்கள்  நிரப்பிக் கொள்ள தேர்தல் ஆணையம் அதிகாரம் வழங்கியுள்ளது.


இவ்வாறு நியமிக்கப்படும் இளநிலை உதவியாளர்கள், டைப்பிஸ்டுகளுக்கு ரூ. 14 ஆயிரத்து 640ம், பதிவறை எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள் ரூ. 9,664ம் ஊதியமாக வழங்கலாம். இவர்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்கள் மூலமும், 2 முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் செய்து விண்ணப்பங்களை வரவேற்றும் தற்காலிக பணி நியமனம் செய்து கொள்ளலாம். 

இதற்கான ஊதியத்தை குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பெற்றுக் கொள்ளலாம். நிதித்துறையின் அனுமதி பெற்றே இந்த உத்தரவு வெள்ளியிடப்படுகிறது. என  தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

4 comments:

 1. பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம்? அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. inthapayallukku yarum vottu potathirekal

   Delete
  2. inthapayallukku yarum vottu potathirekal

   Delete
 2. ivan mosadi pervali 58-59 59-60 akkinavan

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி