தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்! - kalviseithi

Mar 3, 2021

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்!

 


சசிகலாவின் அரசியல் நகர்வால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு, நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு பாதகமான தாக்கம் ஏற்படும் என்று 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

கருத்துக் கணிப்பு

சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. வழக்கம்போல் இந்த முறையும் அதிமுக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதேசமயம் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணியும் இந்த தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். 


இந்நிலையில், இந்த தேர்தலில் மக்களின் மனநிலை என்ன? என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளுடன் தந்தி டிவி கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. பிப்ரவரி 2ம் தேதி முதல் 22ம் தேதிவரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


அதில், அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா? என்ற கேள்விக்கு இல்லை என்றே அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நகர்ப்புறங்களைப் பொருத்தவரை அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிப்போம் என 42 சதவீதம் பேரும், வாக்களிக்க மாட்டோம் என்று 56 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள கணக்கெடுப்பின்படி, அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிப்போம் என 45 சதவீதம் பேரும், வாக்களிக்க மாட்டோம் என்று 50 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.


இதேபோல் திமுக ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா? என்ற கேள்விக்கு 48 சதவீதம் பேர் ஆம் என்றும், 46 சதவீதம் பேர் இல்லை என்றும் கருத்து பதிவிட்டுள்ளனர். 6 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை. 


சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற யாருக்கு வாய்ப்பு அதிகம்? என்ற கேள்விக்கு திமுக கூட்டணிக்கு ஆதரவாக 47 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 41 சதவீதம் பேரும், கடும் போட்டி இருக்கும் என 11 சதவீதம் பேரும், மற்றவர்களுக்கு வாய்ப்பு என ஒரு சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


உங்களின் முதலமைச்சர் தேர்வு யார்? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக 47 சதவீதம் பேரும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 42 சதவீதம் பேரும் கருத்து பதிவிட்டுள்ளனர். சீமான் 4 சதவீதம், கமல் 2 சதவீதம், டிடிவி தினகரன் 1 சதவீதம், மற்றவர்கள் 4 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளனர். முதலமைச்சரின் செயல்பாடு எப்படி? என்ற கேள்விக்கு நன்று என 37 சதவீதம் பேரும், சரியில்லை என 43 சதவீதம் பேரும், சராசரியாக இருப்பதாக 20 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.


2021 தேர்தல் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு எதிர்க்கட்சி ஆட்சி அமைக்கும் என்று 49 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தொங்கு சட்டமன்றம் அமையும் என்று 10 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.


அதிமுக அரசின் செயல்பாடு உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என்ற கேள்விக்கு இல்லை என அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இல்லை என 52 சதவீதம் பேரும், ஆம் என 44 சதவீதம் பேரும் கூறி உள்ளனர். 4 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.


சசிகலாவின் அரசியல் வருகை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு இல்லை என 51 சதவீதம் பேரும், ஆம் என 40 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 9 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.


சசிகலாவின் அரசியல் நகர்வால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு, நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு பாதகமான தாக்கம் ஏற்படும் என்று 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். அதிமுகவுக்கு சாதகம் என 11 சதவீதம் பேரும், திமுகவுக்கு சாதகம் என 14 சதவீதம் பேரும், திமுகவுக்கு பாதகம் என 7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த ஒட்டுமொத்த கருத்துக் கணிப்புகளைப் பார்க்கையில் எதிர்க்கட்சியான திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதையே காட்டுகிறது. அதேசமயம், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையிலான இடைவெளி மிக குறைவாகவே உள்ளது. எனவே, தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபின்னர், கள நிலவரத்தில் மாற்றம் ஏற்படலாம்.

10 comments:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING

  Each Subject Handling By 3 Efficient Faculties

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

  இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

  ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

  ReplyDelete
 2. பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம்? அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது.

  ReplyDelete
 3. பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம்? அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது.

  ReplyDelete
 4. பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம்? அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது.

  ReplyDelete
 5. கருத்துக் கணிப்புகள் எப்போதும் வெற்றி பெறுவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஆமா கருத்துக் கணிப்புகள் எப்போதும் வெற்றி பெறுவதில்லை. எப்படி வெற்றி பெறும் அதான் மெஷினயே மாத்தினா எப்படி வெற்றி பெறும்...

   Delete
 6. தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் எங்கள் தலைவன் டிபன்பாக்ஸ் வாயழகன் திரு.சீமான்டி சிலுக்கு அவர்கள் வாழ்க.

  ReplyDelete
 7. சீமானுக்கு போடுங்கள் ஓட்டை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி