குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1500: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்; முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2021

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1500: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்; முதல்வர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதி.

 


ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தொகுதி பங்கீடு குறித்தும் தேர்தல் அறிக்கை குறித்த ஏற்பாடுகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட 95% முடிந்துவிட்டது. வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியிலும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அதிமுக சார்பில் முதற்கட்டமாக 6 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 


இந்நிலையில், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் அறிக்கைக்கு குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இதற்கு பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூட்டாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக பேட்டியளித்தனர். முதலில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவித்தார். கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்த பின் அதிமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்படும். வரும் 12-ம் தேதிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

8 comments:

  1. தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த தளத்தை பயன்படுத்த வேண்டாம். கட்சி சார்பற்று இருப்பது நல்லது. பெட்ரோல் விலையை குறைக்க அருகதை இல்லை...5 லட்சம் கோடிக்கு மேல் கடன்...இலவசங்கள் தேவையா? என்பது போன்ற அறிவு பூர்வமான விவாதங்களை முன்னெடுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. 10.05 உள்ஒதுக்கீடு தன்சாதிக்குக் கொகொடுத்ததற்கு நன்றிக்கடன் பட்டுள்ளது கல்விச்செய்தி

      Delete
  2. இப்போது தான் இவர்களுக்கு ஞான உதயம் வந்தது. வேலை வாய்ப்பு ஏற்படுத்தினாலே போதுமே.இவர்களுடைய ஆட்சியில் tet தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பகுதிநேர ஆசிரியர்களும் ஒன்றும் செய்யவில்லை. உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை. இவர்கள் தான் இப்போது சிலிண்டரும் பணமும் தருகிறார்களாம். ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது என்ன செய்தார்கள்.

    ReplyDelete
  3. திமுக தேர்தல் அறிக்கை ய காப்பி அடிக்குறான் அதிமுக. பிட்டு சாமி.

    ReplyDelete
  4. Any PG Economics want mutual transfer to nagercoil contact 9952739404

    ReplyDelete
  5. நிரந்தர முதல்வர் பழனிசாமி வாழ்கே வளர்கே

    ReplyDelete
  6. திரு..ப‌ழ‌னிசாமி அவ‌ர்க‌ளே!...
    ப‌த்து வ‌ருட‌ம் ஆட்சியில் இருந்த‌ க‌ட்சி வாக்குறுதி கொடுக்க‌க் கூடாது...செய்து காட்டியிருக்க‌ வேண்டும்....நீங்க‌ள் போன‌ தேர்த‌ல்க‌ளில் கொடுத்த‌ ப‌ல‌ வாக்குறுதிக‌ள் இன்னும் நிறைவேற்ற‌ப்ப‌டாம‌லேயே உள்ள‌ன...நாங்க‌ள் அவ்வ‌ள‌வு எளிதில் ம‌ற‌ந்து விட‌ மாட்டோம்...
    ப‌டித்த‌வ‌ர்க‌ளிட‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌ பாம‌ர‌ ம‌க்க‌ளிட‌மும் உங்க‌ பாட்ச்சா ப‌லிக்காது...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி