தேர்தல் பயிற்சிக்கு வர மறுத்த 17 ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு. - kalviseithi

Mar 18, 2021

தேர்தல் பயிற்சிக்கு வர மறுத்த 17 ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு.

அசாம் மாநிலத்தில் தேர்தல் பணிக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறார்கள். ஆனால் பல ஆசிரியர்கள் தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி தேர்தல் பணிக்கு வர மறுத்துவிட்டார்கள் . அவர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழையும் மேல் அதிகாரிகளிடம் வழங்கினார்கள். இவ்வாறு மருத்துவ சான்றிதழ் அளித்தது சரியானது தானா ? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பல ஆசிரியர்கள் தவறான முறையில் சான்றிதழ் பெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 17 ஆசிரியர்களை கட்டாய ஓய்வில் ( வி.ஆர் . எஸ் . ) செல்லும் படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

அதில் தேர்தல் பணி ஆற்ற முடியாத நிலையில் உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் , நீங்கள் ஆசிரியர் பணியையும் சரியாக செய்ய முடியாது. எனவே கட்டாய ஒய்வில் சென்று விடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


7 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி