புதுச்சேரியில் பள்ளிகளை மூட பரிந்துரை - kalviseithi

Mar 18, 2021

புதுச்சேரியில் பள்ளிகளை மூட பரிந்துரை

 


புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தற்காலிகமாக பள்ளிகளை மூட துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.


கொரோனா அதிகரித்து வருவதால் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிடலாம் என கவர்னருக்கு மாநில சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் இனி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இம்மாதம் 31ம் தேதி வரை 1 முதல் 9 வரை வகுப்புகள் செயல்படும். கோடைவிடுமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி பள்ளிகள் திறந்து 5 நாட்கள் நடத்தப்படுகிறது.இந்நிலையில் கவர்னர் மாளிகையில் நேற்று கொரோனா தடுப்பூசி கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், கொரோனா தடுப்பு குறித்து மாநிலத்தில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, புதுச்சேரியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிடலாம். கொரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சலை கண்டறிய முகாம் நடத்த வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்டினை 70 சதவீதமும், 30 சதவீதம் ரேபிட் டெஸ்ட் எடுத்து பரிசோதனைகளை அதிகரிக்கலாம். புதுச்சேரியில் மாஸ்க் அணியும் இயக்கத்தை தொடங்கி, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். மருத்துவ மாணவர்களையும், முன் கள பணியாளர்களாக இணைக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் பரிந்துரை செய்தனர். இது குறித்து பள்ளி கல்வித் துறையுடன் சுகாதார துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

1 comment:

  1. பரவுவது பொது இடத்தில்
    மூடுவது பள்ளிகளை....

    உயர்பதவிகளை வகிப்பவர்கள் மெண்டல்களாக இருந்தால் இப்படித்தான் பரிந்துைரைப்பார்கள்


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி