நாளை ( 20.03.2021) சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - kalviseithi

Mar 19, 2021

நாளை ( 20.03.2021) சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

 


வரும் ஞாயிற்றுக்கிழமை 21/03/2021 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல் தேர்தல் வகுப்பு நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆசிரிய பெருமக்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டி இருந்ததால் வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்குமாறு மதிப்புக்குரிய தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக கோரிக்கை விடுத்திருந்தோம்‌. அந்தக் கோரிக்கையை மனமுவந்து ஏற்றுக் கொண்டு வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆணை பிறப்பித்த மதிப்புக்குரிய தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களுக்கு தேனி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

4 comments:

  1. மதுரை மாவட்ட ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் இதற்கு செவி சாய்க்கவில்லை.வாழ்க மதுரை மாவட்ட ஜனநாயகம்.

    ReplyDelete
  2. Working days ல தேர்தல் பயிற்சியை நடத்துங்க. விடுமுறையில் நடத்தாதீங்க. இதனால் யாரும் விருப்பமில்லாம கலந்துக்கராங்க பயிற்சியின் நோக்கம் நிறைவேறாமல் போகிறது.

    ReplyDelete
  3. Theni collector dheivam... meedhi perum irukanga...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி