80 ஆதி திராவிடர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ.14,73,80,605/-க்கு நிர்வாக அனுமதி – ஆணை - kalviseithi

Mar 13, 2021

80 ஆதி திராவிடர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ.14,73,80,605/-க்கு நிர்வாக அனுமதி – ஆணை

 


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – தமிழக முதலமைச்சரின் சட்டமன்ற விதி 110ன் கீழான அறிவிப்பு - 10 ஆண்டுகளுக்கு மேலான 80 ஆதி திராவிடர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ.14,73,80,605/-க்கு நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் , 24.03.2020 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110 - இன் கீழ் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்கள் : “ 10 ஆண்டுகளுக்கு மேலான , 80 ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் 20 பழங்குடியினர் நல விடுதிகளில் கூடுதல் கழிவறைகள் , குளியலறைகள் , மின் சாதனங்கள் போன்ற அடிப்படை வசதிகள் தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் ”. 


2. இவ்வறிவிப்பு தொடர்பாக , மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் , ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் , 80 ஆதிதிராவிடர் நல விடுதிகளை தேர்வு செய்து கழிவறை , குளியலறை , குடிநீர் வசதி மற்றும் மின் இணைப்புகள் சரிசெய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ரூ .15,93,50,000 / -க்கு தாட்கோ செயற்பொறியாளரிடமிருந்து மதிப்பீடு பெறப்பட்டுள்ளதாக தெரிவித்து , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் தெரிவு செய்யப்பட்ட 80 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ரூ .15,93,50,000 / - மதிப்பீட்டில் கழிவறை , குளியலறை , குடிநீர் வசதி மற்றும் மின் இணைப்புகள் சரி செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்தும் , நிதி ஒப்பளிப்பு செய்தும் ஆணையிடுமாறு அரசினை கோரியுள்ளார்.


3. மேற்காணும் ஆதிதிராவிடர் நல ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து , 10 ஆண்டுகளுக்கு மேலான , இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள 80 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் கூடுதல் கழிவறைகள் , குளியலறைகள் , மின் சாதனங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ .14,73,80,605 / - ( ரூபாய் பதினான்கு கோடியே எழுபத்து மூன்று இலட்சத்து எண்பதாயிரத்து அறுநூற்று ஐந்து மட்டும் ) - க்கு ஆதிதிராவிடர் நல ஆணையருக்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.

GO No : 24 - Download here...1 comment:

  1. முதலில் பள்ளிக்கூடத்தை சரி செய்யுங்கள் ஐயா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி