9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2021

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதுகுறித்து ஆசிரியர் சங்கத் தலைவர் இளமாறன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. சில மாணவர்களுக்கும் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் அதற்காகப் பயிற்சி வகுப்புகளுக்கு ஆசியர்கள் செல்ல உள்ளனர். எனவே, பொதுத் தேர்வு நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைத் தவிர ஆல் பாஸ் அறிவித்துள்ள 9, 10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


தொற்றுப் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் சுகாதார அதிகாரிகள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கின்றனர்.

6 comments:

  1. மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்கள் எல்லோருக்கும் கொரோனா பரவுதால் விடுமுறை விடலாம். மின்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கும் விடுமுறை அளிக்கலாம். சரிதானே. ஒரு வருடம் வேலை பார்க்காமல் இருந்தீர்கள் இன்னுமா. ?

    ReplyDelete
    Replies
    1. தனியார் பள்ளி ஆசிரியர்கள் போல இவர்களுக்கும் half Salary கொடுக்கணும். அப்பதான் அரசுப் பள்ளி மாணவர்கள் ெரோனா பாதிப்பு இல்லாம ஆரோக்யமா இருப்பாங்க.

      Delete
  2. PG TRB 2021
    *Online Test Series*
    Unit wise Micro & Macro Tests

    *ALL SUBJECTS*
    *Pattern: தமிழ் & English*

    Starts From :
    *March*
    15.03.2021(Monday)

    To
    *JUNE*
    18.06.2021 (Friday)

    (ALL SUBJECTS + EDUCATION + GK) தமிழ்,English,Maths,
    Physics,Chemistry,Botany,
    Zoology,Commerce,
    Economics, History, Computer Instructor, Geography, Physical Education & Political Science

    *For Booking:*
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    *Contact:* 9976986679
    6380727953

    ReplyDelete
  3. Appom 12th pasangalukku ethuyum aana peravailla appdithana avangalum manusangathan avanga onnum vanathulu irunthu kuthikkala . Appom corona kitta evangalam 12th apdinu sonna athu onnume pannama poyerum appdithan sollavarenga

    ReplyDelete
    Replies
    1. 60, 70 வயசு பாட்டி தாத்தாங்க எல்லாம் ெ ரோனாவ எதிர்கொண்டு வெற்றி பெற்று " வெற்றி நடை போடும் தமிழகமே " கெத்தா கம்பு சுத்திகிட்டு இருக்காங்க... நீங்க என்ன ஓடுற பாம்ப கால்ல மிதிக்கற வயசுல இருந்துகிட்டு இப்படி பயப்படுறீங்க...

      தினமும் ே திய உடற்பயிற்சி செஞ்சு, வீட்டு சாப்பாட சாப்பிட்டு, நேரத்துக்கு தூங்கி எந்திரிச்சு , போன்ல கேம் விளையாட ம தகுந்த பாதுகாப்பு முறைகைளை பின்பற்றினாலே போதும். கரோனா " சீச்சி இந்த உடம்பு புளிக்கும் " ன்னு ஓடிரும்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி