9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2021

9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.

இதனைதொடர்ந்து அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த சுழலில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், இந்த மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும், அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.






5 comments:

  1. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருத்தேர் முன்னிட்டு விழுப்புரம் மாவட்டதிற்கு நாளை 18.03.2021.உள்ளூர் விடுமுறை.

    ReplyDelete
  2. PG TRB 2021
    *Online Test Series*
    Unit wise Micro & Macro Tests

    *ALL SUBJECTS*
    *Pattern: தமிழ் & English*

    (ALL SUBJECTS + EDUCATION + GK) தமிழ்,English,Maths,
    Physics,Chemistry,Botany,
    Zoology,Commerce,
    Economics, History, Computer Instructor, Geography, Physical Education & Political Science

    ALL SUBJECTS LIVE ONLINE CLASSES AVAILABLE FROM CLASS ROOM

    *For Booking:*
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    *Contact:* 9976986679
    6380727953

    ReplyDelete
  3. NEET UG 2021
    Exam August 1st

    Repeater & Crash Course
    Coaching classes

    From Class Room Direct & live online classes
    Separate English and Tamil Medium

    Hostel Attached Class rooms

    Model classes:
    YouTube search:
    Magic plus coaching centre

    For Admission:
    Magic Plus Coaching Center, Erode-1
    Contact:
    9976986679
    6380727953

    ReplyDelete
  4. நல்ல அதிகாரி.
    நம் நாடு கல்வியில் அசுர வளர்ச்சி அடையப் போவதற்கான அறிகுறிகள் நன்கு தெரிகின்றன.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி