ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - kalviseithi

Mar 3, 2021

ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 


இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழக மண்டல இயக்குநரின் கடிதத்தில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக புதிதாக ( PGDET - Post Graduate Diploma in Educational Technology ) என்ற பட்டப் படிப்பு தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதில் ஆசிரியர்கள் சேர்வதற்கான பயிற்சிக் கட்டணத்திற்கு நிதியுதவி செய்து ஆசிரியர்கள் சேர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரியுள்ளார். இப்பட்டயப் படிப்பில் ஆசிரியர்கள் பயிற்சி பெறுதல் சார்ந்து ரூ .6600 / பயிற்சிக் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் இது ஓராண்டு முதல் மூன்றாண்டு முடிய உள்ள பயிற்சிக் காலம் எனவும் , ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் இதற்கான சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காண் பொருள் சார்பாக தகுதியுள்ள ஆசிரியர்கள் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்கு செலுத்தப்படும் பயிற்சி கட்டணம் ஆசிரியர்களே செலுத்தி பயிற்சி பெறலாம் எனவும் , அவ்வாறு பயிற்சியில் சேரும் ஆசிரியர்கள் துறை அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்து உரி நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவிக்கலாகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி