அடிப்படை வசதியை உறுதிப்படுத்துங்கள் கமிஷனுக்கு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2021

அடிப்படை வசதியை உறுதிப்படுத்துங்கள் கமிஷனுக்கு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

 


தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, உணவு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என, ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.


இது குறித்து, தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர் அலுவலக சங்க நிர்வாகிகள், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் கொடுத்த மனு:தேர்தல் பணி மிகவும் முக்கியமான, தவிர்க்கக் கூடாத பணி. எனினும், கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய், இதய நோய், சிறுநீரகக் கோளாறு போன்ற, நோய் பாதிப்பு உள்ளோருக்கு, மனிதாபிமான அடிப்படையில், தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


ஒவ்வொரு தேர்தலிலும், அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற, 100 சதவீதம் தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும்.ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில், தேர்தல் வகுப்புகளை நடத்த வேண்டும். 


பெண் ஆசிரியர்களை, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகே உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்த வேண்டும்.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, உணவு மற்றும் இதர அடிப்படை வசதிகளை, உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. https://epaper.dinakaran.com/3038064/Chennai-Main/24-03-2021#page/10/1

    ReplyDelete
  2. அய்யா,
    பெரிய கொடுமை
    தஞ்சாவூர் மாவட்டத்தில்,
    பெண் ஆசிரியர்களுக்கு 100 கிலோமீட்டர க்கு அதிகமான தொலைவில் நாளைய தேர்தல் பயிற்சி வகுப்பு,
    இது மிகவும் கண்டிக்க தக்கது,
    வேதனை அளிக்கிறது,
    ஏற்கனவே நீதி மன்றத்தில்,
    இந்த பிரச்சினை விசாரிக்க பட்டபோது,
    பெண் பணியாளர்களுக்கு 30 கிலோ மீட்டர் க்கு, மிகா தொலைவில் தான்
    தேர்தல் பணி அளிக்கப்படும்,
    என்று தேர்தல் ஆணையம்,
    உறுதி அளித்து இருந்தது
    நினைவு கூறதக்கது,

    "
    ஊருக்கு இலச்சவனே
    பிள்ளையார் கோயில் ஆண்டி"
    அவனுக்கும்
    தொக்கு
    பள்ளிக்கூடத்து வாத்தி"

    ReplyDelete
  3. அரசு ஆசிரியர்களே இப்படிப் புலம்பினால், தனியார்ப் பள்ளி ஆசிரியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். அரசு ஆசிரியர்களுக்காவது எதாவது ஒன்றென்றால் கேட்க சங்கம் இருக்கிறது. அரசு சாரா ஆசிரியர்கள் என்றால் அவர்கள் ஆனாதைகள் தான். கேட்க நாதியில்லை

    ReplyDelete
    Replies
    1. தனியார் ஆசிரியர்கள் மறுத்து விடலாம் . யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி