வாக்குறுதிகள் அதிகம்: ஆசிரியா்களின் ஆதரவு யாருக்கு? - kalviseithi

Mar 18, 2021

வாக்குறுதிகள் அதிகம்: ஆசிரியா்களின் ஆதரவு யாருக்கு?

 


ஆசிரியா்களின் வாக்குகளைக் கவரும் வகையில், அவா்களுக்கு வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் பெருமளவு அளித்துள்ளன.


தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வாக்காளா்கள் ஏதாவது ஒரு கட்சியைச் சோ்ந்தவா்களாகவோ அல்லது அந்தக் கட்சியின் அபிமானிகளாகவோ இருப்பாா்கள். தோ்தலில் அவா்கள் தொடா்புடைய கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பாா்கள் என பொதுவான கருத்து உண்டு. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 65 சதவீதம் வாக்குகள்தான் அரசியல் கட்சியினரின் வாக்குகள். எஞ்சியுள்ள 35 சதவீதம் வாக்குகள் கள நிலவரத்தைப் பொருத்து முடிவு செய்யப்படும் எனத் தெரிய வருகிறது.


அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த களச் சூழலையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டவா்கள்தான் ஆசிரியா்கள். பாமர மக்கள் முதல் பணக்காரா்கள் வரை அனைவரிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவா்களில் அரசியல்வாதிகளுக்கு அடுத்ததாக இருப்பவா்கள் ஆசிரியா்கள். இன்றும் கிராமப்புறங்களில் ஆசிரியா்களின் சொல்லுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை இருக்கிறது.


இத்தகைய காரணங்களால்தான் ஒவ்வொரு தோ்தலின்போதும் ஆசிரியா்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்வதற்காக ஊதியம், சலுகைகள் சாா்ந்த அறிவிப்புகளை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தவறாமல் வெளியிட்டு வருகின்றன. அது இந்தத் தோ்தலிலும் நடந்திருக்கிறது.


20 லட்சம் வாக்குகள்: 


தமிழகத்தில் உள்ள 59 ஆயிரம் அரசு, தனியாா் பள்ளிகளில் தற்போது 5.7 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். அவா்களது குடும்பத்தினா், கல்வியியல் கல்லூரி மாணவா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வெழுதி காத்திருப்போா் ஆகியோரையும் சோ்த்தால் சுமாா் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அவா்கள் வசம் வைத்திருக்கிறாா்கள் எனலாம். இந்த வாக்குகளைப் பெறுவதற்காக அதிமுக, திமுக என இரு பெரும் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன.


என்னென்ன வாக்குறுதிகள்?: அரசுப் பள்ளிகளில் ஒப்பந்தத், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா், தனியாா் பள்ளி மாணவா்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும். தனியாா் பள்ளி ஆசிரியா்களின் ஊதியத்தையும் அரசு நிா்ணயிக்கும். அரசு, தனியாா் பள்ளிகளில் ஒரே பாடத் திட்டம் அமல்படுத்தப்படும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு மடிக் கணினி வழங்கப்படும் ஆகிய அம்சங்கள் அதிமுக, பாமக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் தோ்தலில் ஆசிரியா்களின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ரத்து செய்தாா்.


மற்றொரு புறம், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். ஆசிரியா்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும், ஆசிரியா் தகுதித் தோ்வில் கலந்துகொண்டு தோ்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியா் தோ்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுள்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும், ஊக்க ஊதியம் வழங்கப்படும், பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது.


அதேபோன்று காங்கிரஸ், நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளும் ஆசிரியா்கள் நலன் சாா்ந்த வாக்குறுதிகளை அளித்துள்ளன. இவற்றில் தனியாா் பள்ளிகளின் கட்டணத்தை அரசே செலுத்தும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் ஆகியவை எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியே. இருப்பினும் இது கட்சிகளின் நிா்வாகத் திறனைப் பொருத்து மாறுபடலாம்.


தோ்தல் நெருங்கி வரும் சூழலில் ஆட்சி மாற்றத்தில் முக்கியத்துவம் வகிக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.


150-க்கும் மேற்பட்ட சங்கங்கள்: தமிழகத்தில் அனைத்து ஆசிரியா்களுமே ஏதாவது ஓா் ஆசிரியா் அமைப்பில் இடம்பெற்றிருக்கின்றனா். சுமாா் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியா் சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் 50 சதவீத அமைப்புகள் திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என கட்சி சாா்ந்தும், எஞ்சிய 50 சதவீத அமைப்புகள் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலையாகவும் செயல்பட்டு வருகின்றன. அவா்கள் அனைவரிடமும் கட்சி பேதமின்றி ஆளும் கட்சியினரும், எதிா்க்கட்சியினரும் தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கேட்டு வருகின்றனா். அப்போது, தோ்தல் அறிக்கையில் இல்லாத புதிய வாக்குறுதிகளும்கூட அளிக்கப்படுகின்றன.


சிதறாத வாக்கு வங்கி: கடந்த தோ்தல்களில் குறிப்பிட்ட சமுதாயங்களைச் சோ்ந்தவா்கள், விவசாயிகள், தொழில் துறையினா் வாக்குகள் ஒரே கட்சிக்குச் செல்லாமல் பரவலாகவே கிடைத்திருக்கின்றன. ஆசிரியா்கள் மற்றும் அந்தத் துறையைச் சாா்ந்தவா்களின் வாக்குகள் எப்போதுமே அதிமுக அல்லது திமுக என இவற்றில் ஏதாவது ஒரு கட்சிக்கு மட்டுமே 70 சதவீதம் முதல் 80 சதவீதம் அளவுக்கு கிடைத்திருக்கின்றன. இதனால் இந்த இரண்டு கட்சிகளுமே பயனடைந்துள்ளன. ஏதாவது ஒரு கட்சி தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறையும் அதே கட்சியை ஆசிரியா்கள் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. மாறாக வேறு கட்சிக்குதான் வாக்களிக்கின்றனா்.


தமிழகத்தில் 1.30 கோடி மாணவா்களின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் ஆசிரியா் சமுதாயம், மறைந்த முதல்வா் ஜெயலலிதா, முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆகியோா் இல்லாத முதல் தோ்தலைச் சந்திக்கிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணியும், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணியும், கடும் போட்டியைச் சந்திக்கின்றன. இந்த முறை மாணவா்களின் எதிா்காலம் மட்டுமல்ல; இரு பெரும் தலைவா்களின் எதிா்காலமும் ஆசிரியா்களின் கைகளில்தான் இருக்கிறது.


Source : Dinamani 

60 comments:

 1. Replies
  1. " கோபி " வாக்காளர்கள் கோபக்காரர்கள். "கோட்டை"ய "காலி" பண்ணாம விடமாட்டோம்.

   Delete
 2. All Teachers Think & Pls vote for DMK Alliance..

  ReplyDelete
 3. No one has spoken about assurance of teachers appointment....
  Even if they assure, appointment is not possible one. Because, retired age has been extended. Hence, no government can provide job opportunity in the field of teaching. It is of futile to talk about election and support. The people who are already working may be benefitted. Am I right?

  ReplyDelete
 4. Replies
  1. கோபி " வாக்காளர்கள் கோபக்காரர்கள். "கோட்டை"ய "காலி" பண்ணாம விடமாட்டோம்.

   Delete
 5. teachers ellam muttalkal ellai Admk support panna, Teachers anaivarum very intelligent all of you support only DMK.

  ReplyDelete
 6. DMK will win . Teachers vote for DMK.

  ReplyDelete
 7. Employment seniority basis appointment?! (atleast 10% )

  ReplyDelete
 8. சம்பள பில் தவிர வேற எந்த பில் போட்டாலும் காசு வாங்காம விட்றதில்லங்கற OA முதல் கையெழத்து போடும் நபர் வரை சபிக்கபட்டவர்கள்(எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்)

  ReplyDelete
 9. நாம் தமிழர் கட்சி

  ReplyDelete
 10. எனது ஓட்டு திமுக கூட்டணிக்கே

  ReplyDelete
 11. All teachers support only DMK.. Teachers vote ellame DMK kuthan. .Ithu ellarukum therium

  ReplyDelete
 12. ஆசிரியர்களின் எதிர்காலம் செழிக்க DMK க்கு வாக்களிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் எதிர்காலம் இன்னும் செழிக்கனுமா.... இப்பவே நல்லா செழிப்பா தான் இருக்கு

   Delete
  2. "கோபி" யில "கோட்டை"க்கு வெக்கிறோம் பெரிய "ஆப்பு".

   Delete
 13. தி.மு.க. வுக்குதான் எனது வாக்கு 7வருடம் ஆளும் ஆட்சிய நம்பி நாசமா போனதுதான் லாபம்.2013ல் தகுதி தேர்வு எழுதி பணி நியமனம் வழங்க முடியாத கையாலாகாத அ.தி.மு.க ஆட்சி.

  ReplyDelete
 14. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 15. கடந்த ஒரு வருடமாக கொரோனா தாக்கத்தால் பாதி சம்பளம் மற்றும் சம்பளமின்றி தவித்தோம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாங்கள் 2 லட்சம் பேர். அப்போது எங்கே சென்றனர் ஆளும் அதிமுக வும் சரி எதிர்கட்சி திமுக வும் சரி, இருக்கின்ற அனைத்து கட்சிகளிலும் யாராவது ஒருத்தராவது நம்ம கஷ்டப்பட்ட போது நமது நிலைமையை கேட்டறிந்தனரா? இப்போ மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை. யாருக்கு ஓட்டு போட்டாலும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கொத்தடிமைகள் தான். ஆகவே எனது வாக்கு நோட்டா விற்கே..

  ReplyDelete
  Replies
  1. தனியார் பள்ளி ஆசிரியர் மட்டும் பாதிக்கவில்லை அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் பாதிப்புதான்.அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுக்கசொல்லும் ஊதியத்தை தான் தனியார் கொடுக்குறாங்களா? தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் என்ற செய்றாங்க???

   Delete
  2. தனியார் பள்ளி ஆசிரியர் மட்டும் பாதிக்கவில்லை அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் பாதிப்புதான்.அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுக்கசொல்லும் ஊதியத்தை தான் தனியார் கொடுக்குறாங்களா? தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் என்ற செய்றாங்க???

   Delete
  3. தனியார் பள்ளி ஆசிரியர் மட்டும் பாதிக்கவில்லை அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் பாதிப்புதான்.அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுக்கசொல்லும் ஊதியத்தை தான் தனியார் கொடுக்குறாங்களா? தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் என்ற செய்றாங்க???

   Delete
  4. தனியார் பள்ளி ஆசிரியர் மட்டும் பாதிக்கவில்லை அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் பாதிப்புதான்.அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுக்கசொல்லும் ஊதியத்தை தான் தனியார் கொடுக்குறாங்களா? தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் என்ற செய்றாங்க???

   Delete
 16. Dmk government didn't promise anything to private school teachers,
  Why?

  ReplyDelete
 17. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டில் 3வருடம் விலைவாசி உயர்த்தினால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் ஏனெனில் கலைஞர் ஆட்சியில் கடன் 60 ஆயிரம் கோடி கடன் அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சியில் 90ஆயிரம் கோடி கடன் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வந்தபிறகு 4லட்சம் கோடி கடன் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி வந்தால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது பாவம் ஸ்டாலின் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறார் என்று தெரியவில்லை ஜெயிக்க போறது திமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கு நன்றாக தெரியும்.கடனைமீட்டு தமிழகத்தை திமுக காப்பாற்றினாலும் திமுக கட்சிக்கு ஊழல் புகார் சொல்ல ஒரு கூட்டம் செயல் படும் இது வழக்கமான பாணிதான்

  ReplyDelete
 18. Innoru murai admk vandhal tn modi Nadu nu ayidum paravalana admk ku podunga,dmk is best vote them

  ReplyDelete
  Replies
  1. சரியான சொல்லுரீங்க இப்பவே எடப்பாடி மோடி கிட்ட தமிழ்நாடு அடமானம் வச்சிட்டாரு.அ.தி.மு.க க்கு போடும் வாக்கு ப.ஜ.க க்கு போடும் வாக்கு. தன்மானம் உள்ள தமிழன் எவரும் அ.தி.மு.க ம்கூகூட்டணிக்கு போட மாட்டாங்க.....

   Delete
  2. Dmk win.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!telling l.!lllellll

   Delete
 19. Total production divided credit. Ithula 25 percentage ku mela poga gudathu. But dmk period 26 percent and now 21 percentage. Which party best pls think once again.

  ReplyDelete
 20. Govt employees children yellorum govt school tha padikanum nu soluvara. Itha sona Tamilnad la private school irukathu. All teacher govt employees. Dmk support panravanka itha pana solunga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி