பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் தமிழகம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2021

பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் தமிழகம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தமிழகம் முழுவதும்  பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் தமிழகம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை



பள்ளி மான்ய நிதியில் முறைகேடு :


 தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஊராட்சி ஒன்றிய , நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன . அனைவருக்கும் கல்வி இயக்கம் என்று அழைக்கப்படும் மத்திய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு பள்ளியை பராமரிக்கவும் பள்ளிக்குத் தேவையான கற்றல் கற்பித்தல் பொருட்கள் மற்றும் பள்ளி தளவாட பொருள்கள் வாங்கவும் பள்ளி மானியம் என்ற பெயரில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.


Kootsni Letter - Download here...

1 comment:

  1. பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம்? அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேளுங்கள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி