தேர்தல் பயிற்சிக்கு வராதாவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை - kalviseithi

Mar 20, 2021

தேர்தல் பயிற்சிக்கு வராதாவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

 


 தேர்தல் பணி தொடர் பயிற்சிக்கு வராதவர்கள் , இன்று மதி யத்துக்குள் , தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஆஜராக வேண்டுமென , மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க , கூடுதல் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டவர்கள் , உடல்நிலையை காரணம் காட்டி , சலுகை கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.  சுகாதாரத்துறை அமைத்துள்ள குழுவில் அவர்கள் மறு பரிசோதனை செய்து , குழு அறிக்கையின்படி முடிவு செய்யப்படும் . தேர்தல் பணிக்கான நியமன கடிதம் பெற்று , பயிற்சிக்கு ஆஜராகாதவர்கள் , இன்று மதியம் , மணிக்குள் , ஆஜராகி வருகையை பதிவு செய்ய வேண்டும் . இல்லாத பட்சத்தில் , சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படு மென , மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி