வாக்குச்சாவடி உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்தல் முடியும் வரை தலைமை இடத்தில் இருக்க வேண்டும் - CEO செயல்முறைகள் - kalviseithi

Mar 13, 2021

வாக்குச்சாவடி உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்தல் முடியும் வரை தலைமை இடத்தில் இருக்க வேண்டும் - CEO செயல்முறைகள்

 

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தலில் வருவாய் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்கப்பள்ளிகள் வாக்குச்சாவடி ஆக இயங்கிவருகின்றது 


தேர்தல் பார்வையாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் அப்போது அவ்வப்போது வாக்குச்சாவடிகளை பார்வையிட வருகை புரிய உள்ளார்கள் அது சமயம் சம்பந்தப்பட்ட தொடக்க நடுநிலைப்பள்ளிகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தேர்தல் முடியும் வரை தலைமை இடத்தையிலேயே இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு தலைமை இடத்தை விட்டு அவசியமாக செல்ல வேண்டி இருப்பின் வட்டார கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தும் மாற்று ஏற்பாடு செய்யவும் தக்க அறிவுரை வழங்கவும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

 வருவாய் துறையினர் மற்றும் பிற தேர்தல் சார்பான வருகை புரியும் போது பள்ளிகளை திறந்து வைக்கவும் அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது மேலும் தலைமை ஆசிரியர் தமது கைபேசி எண் மற்றும் இதர விவரங்களை பள்ளி அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கவும் கைப்பேசியினை உயர் அலுவலர்கள் வருவாய் துறையினர் தொடர்பு கொள்ளவும் பட்சத்தில் உடனடியாக சரியான விவரங்களை தெரிவிக்கவும் அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி