Election 2021 - தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 விடுமுறை அறிவித்து அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2021

Election 2021 - தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 விடுமுறை அறிவித்து அரசாணை வெளியீடு.

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 6ஆம் தேதி விடுமுறை என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அசாம் மாநிலத்திற்கு மூன்று கட்டமாகவும், மேற்கு வங்க மாநிலத்திற்கு எட்டு கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ள நிலையி ல், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரு கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.


இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தொடங்கிவிட்டனர். வரும் 19ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.


தேசிய அளவில் இந்த ஐந்து மாநில தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது . ஏனென்றால் பாஜக காலூன்ற நினைக்கும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் இது . அதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன .



இந்நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக தொழிலாளர் ஆணையர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார் .


1 951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 135 பி அடிப்படையில் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பித்தார்.


தினக்கூலி, தற்காலிகம், ஒப்பந்தம் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி விடுமுறை என அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்துள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி