10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு : பள்ளிக் கல்வித் துறை - kalviseithi

Apr 21, 2021

10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு : பள்ளிக் கல்வித் துறை

 

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது என்றும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க ஏதுவாக மாநிலம் முழுவதும் பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.


நேற்று அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் வெளியான இந்த தகவல் உண்மையில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அவ்வாறு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. தவறான தகவலை வெளியிட்டு மாணவர்கள், பெற்றோர்களை குழப்ப வேண்டாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

9 comments:

 1. 😁😂🤪😂🍻😂🥰😙🥰😙😍😃😍😗😍😍🙃😌😵🌞😴🌝🤮🌚🌚💛🤍🤍💚🖤💚

  ReplyDelete
 2. உங்களுக்கு ஒரே குயபமா இருக்குமே.byethebye டில்லில 1965 என்ன கூப்டாங்க

  ReplyDelete
 3. அரசியல இதெல்லாம் சாதாரணமப்பா

  ReplyDelete
 4. Ellaarum ellaa exam mum exhuthungal. Ethavathu ondril ungaluku click aagum.

  ReplyDelete
 5. தேர்வு இல்லை என்று சொல்வதை ஏதோ சமூக சீர்திருத்தம் போல அறிவிக்கிறார்கள். இந்தத் துறையின் அமைச்சர் சிறு வயதில் தேர்வு என்றால் பயந்து செத்திருப்பார் போல. அதனால் தான் தான் பட்ட தேர்வு கஷ்டத்தை நாட்டின் வருங்கால தூண்களாகிய மாணவர்கள் துளியும் படக்கூடாது என்று தேர்வு இல்லை, தேர்வு ரத்து, என்பது போன்ற அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இவ்வாறு தேர்வு ரத்து செய்வது மட்டுமே கல்வித்துறையில் தான் புரியும் சாதனையாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த தேர்வு ரத்து சமூக சீர்திருத்த அறிவிப்புகளால் பல மாணவர்கள் தினக்கூலிகளாக மாறிவிட்டனர். பல மாணவர்கள் ஊதாரிகளாக திரிகின்றனர். பல மாணவர்கள் பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு பைத்தியமாகவே மாறிவிட்டனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் தனது மானம் மரியாதையை இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதுதான் இந்த துறை அமைச்சரின் சாதனை. எண்ணற்ற தனியார் பள்ளி ஆசிரியர்களின் வயிற்றில் அடித்த பாவம் இந்த அதிமுக அரசை சும்மா விடாது. அதற்கான தண்டனையை இவர்கள் அனுபவித்தே தீருவார்கள்.

  50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி தந்தவர்களுக்கு, 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைத்து கல்வி செயல்பாடுகளை, சுணக்கமின்றி நடத்த திராணி இல்லை.

  மாத்திரை கசக்கிறது என்று நோயாளி சொன்னால், மருத்துவர் " சரிடா ராசா நீ மாத்திரை முழுங்காதே, மாத்திரை ரத்து " என்று சொல்வது எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கிறது மாணவர்களுக்கு இந்த முட்டாள்கள் தேர்வு ரத்து அறிவிப்பது. இதனால் அறியாமை எனும் பிணியோடு, பிஞ்சிலேயே பழுத்தல், ஆசிரியர்களை பெற்றோர்களை மதிக்காமல் நடத்தல் , தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் போன்ற பல நோய்களுக்கு மாணவர்கள் ஆளாகி சீரழியப் போகிறார்கள். கொரோனா வினால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, மேற்குறிப்பிட்ட மனநல சார்ந்த நோய்களால் ஏற்படப்போகும் உயிரிழப்புகளே மிக அதிகமாக இருக்கும். அதற்கெல்லாம் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பதவி விலகுவாரா ?

  ReplyDelete
 6. Avaravar parents thaan kaaranam. Chumma yaaraiyum kurai sollaatheergal. Private school teacher nalla salary vaangirargal. Yaarum india vil ezhai illai. Vithi padi nadakum. Avaravar karma palan anubavigirargal.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி