12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை! - kalviseithi

Apr 5, 2021

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!

 

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கலாமா என்று சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 9, 10, 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேநேரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.


இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீராஜ்குமார், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இன்றைய கூட்டத்தில் தேர்வு மையங்களை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் முடிந்த பின்பு மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேர்வு காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது பற்றி சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேர்வை தள்ளிவைப்பதா என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

12 comments:

 1. திமுக வேண்டாம் போடா

  ReplyDelete
  Replies
  1. Admk வேண்டவே வேண்டாம் போங்க சார் 😄

   Delete
 2. Don't post political parties messages

  ReplyDelete
 3. Electio நிறுத்த வேண்டிது thana.... may 3 exam வெச்சிடுங்க பா plz....

  ReplyDelete
 4. Bed., TTC., முடித்தோர்கள்,டெட் தேர்ச்சி பெற்றோர் கண்டிப்பாக வாக்களிக்க மறவாதீர்.

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ... இன்னிக்கு விட்டுட்டு என்னைக்கு விடுதலை நமக்கு??? ஊதர சங்கு கோபி செட்டி பாளையத்துல கேக்கணும் 😄

   Delete
 5. TET passed candidates think panni vote podunga pls...

  ReplyDelete
  Replies
  1. திங்க் பண்ண ஒன்னும் இல்ல .. ஒரே அமுக்கு ...
   அமுக்கு டுமுக்கு அமால் டுமால் 😄😄

   Delete
 6. எவன் வந்தாலும் நமது பிழைப்பு கேவலமாக தான் இருக்க போகிறது.... தனி ஒருவன் மாறாமல் நாடு மாறாது...

  நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகாமல் இருக்க அனைவரும் ஒழுக்கமாய், நேர்மையாய், லஞ்சம் வாங்காமல் குடுக்காமல், ஏமாற்றாமல், இருக்க முடியுமா???


  கண்டிப்பா முடியாது....

  ReplyDelete
 7. Replies
  1. all pass podalam... Engineering admissions epdi podurathu....
   JEE main marks vechu podalama

   Delete
 8. அரசியல் பதிவு வேண்டாம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி