புதிய கல்விக் கொள்கை குறித்த ஆவணம் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியீடு..! தமிழ் மொழி புறக்கணிப்பு. - kalviseithi

Apr 24, 2021

புதிய கல்விக் கொள்கை குறித்த ஆவணம் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியீடு..! தமிழ் மொழி புறக்கணிப்பு.

 

தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அனைத்து மொழி பேசும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் மாநில மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டது. இதில், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு உள்ள நிலையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கல்விக் கொள்கையில் கடந்த 34 ஆண்டுகளாக மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.  


புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை மத்திய அரசிடம்  2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. வரைவை வெளியிட்ட மத்திய அரசு அதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது. எனினும், புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு மொழிபெயர்க்கப்பட்டது.

ஆனால் மாநில மொழிகளிலும் புதிய கல்விக் கொள்கையை மொழிபெயர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை அனைத்து மொழி பேசும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த மாநில மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, காஷ்மீரி, கொங்கணி,  மணிப்புரி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிமாற்றம் செய்து உள்ளூர் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ் மொழி  மட்டும் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

3 comments:

  1. Modi government is always ignoring Tamil. Only during election campaign he will remember Thirukural.

    ReplyDelete
  2. தேர்தல் நேரத்தில் மட்டுமே கேடிக்கு தமிழ் மீதும், தமிழ் நூல்களின் மீதும் ஒரு பற்று வரும்.... மற்ற நேரங்களில் உஊஉஊ...

    ReplyDelete
  3. சரியாத்தானே வெளியிட்டிருக்கிறார்கள் புதியகல்விக்கொள்கை ஒரு குப்பை அதில் என்ன இருக்கு.....தமிழ்நாட்டுக்கு புதியகல்விக்கொள்கை தேவையில்லை.....கஸ்தூரிரரங்கன் குழுவிற்கும் கல்விக்கும் என்ன தொடர்பு மதத்தலைவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்தே பு.க.கொ......தமிழகக்ககல்வி முற்போக்குக் கொள்கையுடையது மீண்டும் குலக்கல்விமுறைக்கு வித்திடுவதே பு.க.கொ.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி